311
விழவுநின்ற வியன்மறுகிற்
றுணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி
330யின்கலி யாணர்க் குழூஉப்பல பயின்றாங்குப்
பாடல் சான்ற நன்னாட்டு நடுவட்
கலைதாய வுயர்சிமையத்து
மயிலகவு மலிபொங்கர்
மந்தி யாட மாவிசும் புகந்து
335முழங்குகால் பொருத மரம்பயில் காவி
னியங்குபுனல் கொழித்த வெண்டலைக் குவவுமணற்
கான்பொழி றழீ இய வடைகரை தோறுந்
தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க்
கோதையி னொழகும் விரிநீர் நல்வர
340லவிரறல் வையைத் துறைதுறை தோறும்
பல்வேறு பூத்திரட் டண்டலை சுற்றி
யழுந்துபட் டிருந்த பெரும்பா ணிருக்கையு
நிலனும் வளனுங் கண்டமை கல்லா
விளங்குபெருந் திருவின் மான விறல்வே
345ளழும்பி லன்ன நாடிழந் தனருங்

328. விழவு நின்ற மறுகு : மதுரைக் 98 ; " விழவறா வியலா வணத்து " (பட்டினப். 158) ; " விழவ றாதவம் பொன்மணி வீதிகளில் " , " வீதி நாளு மொழியா விழாவணி ", "விழவறாதன விளங்கொளி மணிநெடு வீதி " (பெரிய. திருக்குறிப்புத். 98, 104 ; ஏயர்கோன். 3) . ‘ விழவறா வீதிவள நாடு 'என்ற நாட்டின் பெயர் இங்கே அறிதற்பாலது.

329. மதுரைக். 159 - 60 ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

339 - 40. " கோதைபோற் கிடந்த கோதா விரி " (கம்ப. ஆறு செல். 27)

342. அழுந்துபட்டிருந்த : "அழுந்துபட் டலமரும் " (மலைபடு. 219)
பெரும்பாணிருக்கை : " அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும்" (சிலப். 5 : 37)

344. (பி - ம்.)‘ வானவிறல்வேள் '

மானவிறல்வேன் : மலைபடு. 164

அழும்பில் : " பெரும்பூட் சென்னி, யழும்பி லன்ன வறாஅ யாணர்" (அகநா. 44 : 14 - 5) ; " ஊழ்மாறு பெயரு மழும்பில்" (புறநா.