312
கொழும்பல் பதிய குடியிழந் தனருந்
தொன்றுகறுத் துறையுந் துப்புத்தர வந்த
வண்ணல் யானை யடுபோர் வேந்த
ரின்னிசை முரச மிடைப்புலத் தொழியப்
350பன்மா றோட்டிப் பெயர்புறம் பெற்று
மண்ணுற வாழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய வணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
355மழையாடு மலையி னிவந்த மாடமொடு
வையை யன்ன வழக்குடை வாயில்

283 : 4 - 5) ; " அறைபறை யென்றே யழும்பில்வே ளுரைப்ப ", "அழும்பில் வேளோடு " (சிலப். 25 : 177, 28 : 205)

349 மதுரைக். 129.

" இரங்கிசை முரச மொழியப் பரந்தவர், ஓடுபுறங் கண்ட ஞான்றை " (அகநா. 116 : 17 - 8) ; " உரைசால் சிறப்பின் முரை சொழிந் தனவே", " முரசம், பொறுக்குந ரின்மையி னிருந்துவிளிந்தனவே " (புறநா. 62 : 9, 63 : 7 - 8); " அமர ரிட்ட முரசுள" (தக்க. 745) ; " இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி லிட்ட, கடப்ப முதுமுர சங் காணீர்" (இராச.உலா)

இடைப்புலத் தொழிய : " இடைப்புலத் தொழிந்த வேந்துகோட்டியானை " (மதுரைக். 688)

351. மணிநீர் : சிறுபாண். 152-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க; "மணிநீர் நிறைந்தன்று" (பரி.12 : 93) ; " மணிமரு டீநீர் " (அகநா.368 : 10) ; " மணிநிறத் தெண்ணீர்", " மணிதெளித் தன்ன வணிநிறத் தெண்ணீர் " (பெருங். 1. 55 : 2. 3. 4 : 39) ; " மணிநீர்ப் பொய்கை" (பொருளியல்)

352. பல்படைப்புரிசை : " படைமதில்" (பெருங். 3. 4 : 3) ; "படையார் புரிசைப் பட்டினம்" (தே. திருஞா.பல்லவனீச்சரம்)

354. போர்க்கதவு : பட்டினப். 40 ; கலித். 90 : 12 ; பெருங். 3. 3 : 25, 6 : 145

353 - 4. " புரைதீர்ந், தையவி யப்பிய நெய்யணி நெடுநிலை" (நெடுநல். 85 - 6) ; "நெய்யோ டிமைக்கு மையவித் திரள்காழ், விளங்கு நகர் விளங்க" (நற். 370 : 3 : 4)

355. "மலைபுரை மாடத்து " (மதுரைக். 406)

356. "வளிமறையு மின்றி வழக்கொழியா வாயில்" (பு.வெ. 278)