| வகைபெற வெழுந்து வான மூழ்கிச் சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில் யாறுகிடந் தன்ன வகனெடுந் தெருவிற் |
360 | பல்வேறு குழாஅத் திசையெழுந் தொலிப்ப மாகா லெடுத்த முந்நீர் போல முழங்கிசை நன்பணை யறைவனர் நுவலக் கயங்குடைந் தன்ன வியந்தொட் டிமிழிசை மகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மை |
365 | யோவுக்கண் டன்ன விருபெரு நியமத்துச் சாறயர்ந் தெடுத்த வுருவப் பல்கொடி வேறுபல் பெயர வாரெயில் கொளக்கொள நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி நீரொலித் தன்ன நிலவுவேற் றானையொடு |
370 | புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப் புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப |
358.(பி - ம்.) ‘ சில்காற்றசைக்கும்'
359. மு. நெடுநல். 30 ; நற் 200 : 3 ; " யாறெனக் கிடந்ததெரு" (மலைபடு. 481) ; "யாறுகண் டன்ன வகன்கனை வீதியுள்", " நீத்தியாற் றன்ன நெடுங்கண் வீதி " (பெருங். 2. 7 : 7, 5. 7 : 23)
363. " குடைதொறும், தெரியிமிழ் கொண்டநும் மியம்போ லின்னிசை" (மலைபடு, 295 - 6) ; " தண்ணுமை முழவ மொந்தை தகுணிச்சம் பிறவு மோசை, யெண்ணிய விரலோ டங்கை புறங்கையினிசைய வாங்கித், திண்ணிதிற் றெறித்து மோவார் கொட்டியுங் குடைந்து மாடி" (சீவக. 965)
365." ஓவத் தன்ன விடனுடை வரைப்பின்" (புறநா. 251 : 1) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.
365 - 6. " விழவறா வியலா வணத்து, மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய, மலரணி வாயிற் பலர்தொழு கொடியும்" (பட்டினப். 158 - 60)
368 - 9. முருகு. 67-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
369 - 71. முல்லை. 90 - 91.
372. பெரும்பாண். 337-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
365 - 73. அங்காடியிற் பலவகைக் கொடிகளுளவாதல் : "கூலமறுகிற் கொடியெடுத்துநுவலு, மாலைச் சேரி "(சிலப். 6:132-3) ;