| பெருவரை மருங்கி னருவியி னுடங்கப் |
375 | பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக் கூம்புமுதன் முருங்க வெற்றிக் காய்ந்துடன் கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல |
380 | விருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து கோலோர்க் கொன்று மேலோர் வீசி மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக் கந்துநீத் துழிதருங் கடாஅ யானையு |
"கொடியணி கூலம்" " பகலங் காடியிற் பல்லவ ரெடுத்த, பல்வேறு கொடியும் படாகையும் நிரைஇ " (பெருங். 1. 35 : 152, 2. 6 : 20 - 21)
373 - 4. "வேறுபஃ றுகிலி னுடங்கி.................... இழிதரு மருவி " (முருகு. 296 - 316)
376. (பி - ம்.)‘வீக்குபிணி நோன்கயிறு'
380. " மறவோன் சேனை வேழச் சங்கமும் " (பெருங். 1. 33 : 78)
381." கீழு மேலுங் காப்போர் நீத்த, வறுந்தலைப் பெருங்களிறு", (நற். 182 : 8- 9) ; " நெடுவேயும் பாகுஞ் சுளிந்துவரு கடகளிறு", " வேயொடு பாகடர் கம்ப நிகள மதாசலம்" (வி. பா. வசந்த.11, பதினேழாம். 66) மேலோர் : மணி. 19 : 20.
375 - 83. களிற்றிற்கு நாவாய் :" நிறையப் பெய்த வம்பி காழோர்,சிறையருங் களிற்றிற் பரதவ ரொய்யும்" (நற். 74 : 3-4) ; " கூம்புமுதன் முறிய வீங்குபிணி யவிழ்ந்து, கயிறுகால் பரிய............. மயங்குகா லெடுத்த வங்கம் போலக், காழோர் கையற மேலோ ரின்றி, ..................ஒருவழித் தங்காது, பாகும் பறையும் பருந்தின் பந்தரும்............... விளிப்ப............... கால வேகங் களிமயக் குற்றென" (மணி. 4 : 30 - 44) ;"ஆடுகொடி யுச்சியணி கூம்பினுயர் பாய்மூன், றீடுபடச் செய்திளைய ரேத்தவிமிழ் முந்நீர்க், கோடுபறை யார்ப்பக்கொழுந் தாட்பவழங் கொல்லா ஓடுகளி றொப்பவினி தோடியதை யன்றே", "மாக்கடற் பெருங்கலங் காலின் மாறுபட், டாக்கிய கயிறரிந் தோடி யெங்கணும், போக்கறப் பொருவன போன்று தீப்படத், தாக்கின வரசுவாத் தம்மு ளென்பவே"," பண்ணார் களிறேபோற் பாயோங் குயர்நாவாய் " (சீவக. 501, 2231, 2793) ; பரி. 10 : 42-55. " களிறுங் கந்தும் போல நளிகடற், கூம்புங் கலனுந் தோன்றும்" (தொல். உவம். சூ.37,மேற்.) ;" அங்கட் கடலி னெடுங்கூம் பகநிமிர்ந்த, வங்கத் தலையுய்க்கு