315
மங்கண்மால் விசும்பு புகையவளிபோழ்ந்
385தொண்கதிர் ஞாயிற் றூ றளவாத் திரிதருஞ்
செங்கா லன்னத்துச் சேவ லன்ன
குரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரிநிமிர்ந்து
காலெனக் கடுக்குங் கவின்பெறு தேருங்
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலி
390னடிபடு மண்டிலத் தாதி போகிய
கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்
வேழத் தன்ன வெருவரு செலவிற்
கள்ளார் களம ரிருஞ்செரு மயக்கமு
மரியவும் பெரியவும் வருவன பெயர்தலிற்
395றீம்புழல் வல்சிக் கழற்கான் மழவர்
பூந்தலை முழவி னோன்றலை கடுப்பப்
பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர்

மீகான்றனைமானத், திங்கட் குறைநிழற்றத் தீந்தே மதங்கவிழ்க்கும், வெங்கட்களிற்றின் மிசைப்பவனி போந்தணைந்தான்" (திருவிளை. வெள்ளையானை. 7) ; "மதலை நிரையின் வரிசை யெனத்திண், மதமைக் களிறு மருவ" (ஆனந்த. வண்டு. 212)

360 - 83. பொருந. 171 - 2ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

384. " அங்க ணிருவிசும்பு" (அகநா. 136 : 4) ; (அங்கண் விசுப்பின் " (நாலடி. 151, 373)

385 - 7. குதிரைக்கு அன்னப்புள் உவமை :" விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப், பொலம்படைப் பொலிந்த வெண்டேர்" (குறுந். 205 : 2 - 3) ; "நிரைபறை யன்னத் தன்ன விரைபரிப், புல்லுளைக் கலிமா", " வயங்குசிறை யன்னத்து நிரைபறை கடுப்ப, நால்குடன் பூண்ட கானவில் புரவி" (அகநா. 234 : 3 -4, 334 : 10 - 11) ;"பானிறப் புரவி யன்னப் புள்ளெனப் பாரிற் செல்ல " (கம்ப.எழுச்சி.69)

388. தேருக்குக் காற்று : மதுரைக் 51-2 ; "காலுறழ் கடுந்திண்டேர்", " வளியி னியன்மிகுந் தேரும்" (கலித். 33 : 31, 50 : 15) ; " காலிய னெடுந்தோர்" (பொருளியல்)

397. " மடவரன் மகளிர் பிடகைப் பெய்த, செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து" (நெடுநல். 39 - 40)