316
பலவகை விரித்த வெதிர்பூங் கோதையர்
பலர்தொகு பிடித்த தாதுகு சுண்ணத்தர்
400தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய்
நீடுகொடி யிலையினர் கோடுசுடு நூற்றின
ரிருதலை வந்த பகைமுனை கடுப்ப
வின்னுயி ரஞ்சி யின்னா வெய்துயிர்த்
தேங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றைப்
405பல்வேறு பண்ணியந் தழீஇத்தரி விலைஞர்
மலைபுரை மாடத்துக் கொழுநிழ லிருந்தர
விருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப்
பெரும்பின் னிட்ட வானரைக் கூந்தலர்
நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர்
410செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை
செல்சுடர்ப் பசுவெயிற் றோன்றி யன்ன
செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்க

399."தாதுபல வமைத்துச்,சுண்ணப் பெருங்குடம் பண்ணமைத் திரீஇ " (பெருங். 2. 2 : 73 - 4)

398 - 9." சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ........... இடித்த சுண்ணத்தர் " (சிலப். மங்கல. 56 - 7)

397 - 9." வண்ணமுஞ் சாந்து மலருஞ் சுண்ணமும் ............ பகர்வோர்" (சிலப். 6 : 134 - 5)

400.‘பூமாண்டதீந்தேன்றொடை - பொலிவு மாட்சிமைப் பட்ட தேன்போல இனிய நீரையுடைய தாறு ;'தகைசெய் ......... காய்' என்றார் பிறரும்" (சீவக. 31,ந.)

400 - 401." பழுக்காய்க் குலையும் பழங்காய்த் துணருங், களிக்காய்ப் பறியுந் துவர்க்கா யும்பலும், ............. தளிரிலைவட்டியொடு ...............எண்ணா தீயுந ரின்மொழிக் கம்பலும்" (பெருங். 2. 2 : 70 - 75)

405." பண்ணியப் பகுதியும் பகர்வோர்" (சிலப். 6 : 135)

406.மலைபுரைமாடம் : மதுரைக். 355.

407 - 8.முருகு. 127.

410." செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த" (புறநா. 9 : 9)

411." பசந்தென்றார், மாலைக்காலத்துப் பரந்த பச்சை வெயிலை ;‘ செல் .............. யன்ன ' என்றார்மதுரைக்காஞ்சியிலும். இக்காலத்து இதனைக் காடுகிழாள் வெயிலென்ப " (சிலப். 4 : 5 - 8, அடியார்.)

410 - 12." பாவை,விரிகதி ரிளவெயிற்றோன்றி யன்னநின்"