317
ணைஇய கலுழு மாமையர் வையெயிற்று
வார்ந்த வாயர் வணங்கிறைப் பணைத்தோட்
415சோர்ந்துகு வன்ன வயக்குறு வந்திகைத்
தொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலை
மையுக் கன்ன மொய்யிருங் கூந்தன்
மயிலிய லோரு மடமொழி யோருங்
கைஇ மெல்லிதி னொதுங்கிக் கையெறிந்து
420கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப்
புடையமை பொலிந்த வகையமை செப்பிற்
காம ருருவிற் றாம்வேண்டு பண்ணியங்

(நற். 192:8-10) ; "தாவி னன்பொன் றைஇய பாவை, விண்டவ ழிள வெயில் கொண்டுநின் றன்னமிகுகவின் " (அகநா. 212 : 1 - 3)

413.ஐஇய ............. மாமையர் :"அங்கலுழ் மாமை, நுண்பூண் மடந்தை " (குறுந். 147 : 2 - 3) ; "அங்கலுழ் மாமை கிளைஇய, ............... மாஅ யோளே","அங்கலுழ் மாமை யஃதை " (அகநா. 41 : 15 - 6,96 : 12)

414. வணங்கிறைப் பணைத்தோள் :"வணங்கிறைப் பணைத்தோளெல்வளை மகளிர் " (குறுந். 364 : 5) ;"வணங்கிறையா ரணைமென்றோள் " (பரி. 17 : 33 -4 ) ;"வணங்கிறைப் பணைத்தோள் ............. விறலியர்" (புறநா. 32 : 3 -4)

413 - 4.வையெயிற்று வார்ந்த வாயர் :" வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையை " (குறுந். 14 : 2)

416. குறுந்.276 : 3 - 4 ; கலித்.97 - 12, 117 : 4, 125 : 8; அகநா. 117 : 19 - 20.

417."அஞ்சனம் புரைபைங்கூந்தல் " (பாகவதம். 10. 30 : 4) ;"ஓதி யவிழ்த்து வார்மைக் குழம்பின், மறைவுறு மணிப்பொற் பாவை போலுடன் மறைய விட்டாள்" (பிரபு.மாதேவி. 51)

418.மயிலியலோர் : ப. 64,3-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க ;பொருந. 47 ; சிறுபாண். 16 ;"புனமயில்போன் - மன்னி ........ இயங்குகின்ற தாயத் திடை " (கிளவி விளக்கம்) ;"ஊச றொழிலிழக்கு மொப்பு மயிலிழக்கும் ............... பூங்குழலி நீங்க" (கண்டனலங்.)

419.(பி - ம்.) ‘ தைஇ மெல்லிதின்'

420.நகுவனர் திளைப்ப : " விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே","துறைவனொ டொருநா, ணக்கதோர் பழியும்" (குறுந். 226 : 7, 320 : 4 - 5)