| மொய்ம்பிறந்து திரிதரு மொருபெருந்தெரியன் மணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதை யணிகிளர் மார்பி னாரமொ டளைஇக் |
440 | காலியக் கன்ன கதழ்பரி கடைஇக் காலோர் காப்பக் காலெனக் கழியும் வான வண்கை வலங்கெழு செல்வர் நாண்மகி ழிருக்கை காண்மார் பூணொடு தெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வொள்ளழற் |
445 | றாவற விளங்கிய வாய்பொ னவிரிழை யணங்குவீழ் வன்ன பூந்தொடி மகளிர் மணங்கமழ் நாற்றந் தெருவுடன் கமழ வொண்குழை திகழு மொளிகெழு திருமுகந் திண்கா ழேற்ற வியலிரு விலோதந் |
450 | தெண்கடற் றிரையி னசைவளி புடைப்ப நிரைநிலை மாடத் தரமியந் தோறு மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய நீரு நிலனுந் தீயும் வளியு மாக விசும்போ டைந்துட னியற்றிய |
455 | மழுவா ணெடியோன் றலைவ னாக |
440 குதிரையின் வேகத்திற்குக் காற்றின் வேகம் : "காற்கடுப் பன்ன கடுஞ்செல லிவுளி", "வளிபூட் டினையோ." (அகநா. 224 : 5, 384 : 9) ;"காலியற் புரவி","வளிநடந் தன்னவாச்செல லிவுளியொடு" "வளிதொழி லொழிக்கும் வண்பரிப் புரவி", "வெவ்விசைப் புரவிவீசுவளியாக" (புறநா. 178 : 2, 197 : 1, 304 : 3, 369 :7);"காலியற் புரவியொடு" , "காலியற் செலவிற், புரவி" (பெருங். 1. 38:349, 2. 18:95-6)
442.வானவண்கை : சிறுபாண். 124-6 ; "மழைசுரந் தன்ன வீகை" (மலைபடு. 580) ; "மழைதழீஇய கையாய்" (சீவக. 2779) ; "வருமால் புயல்வண்கை மான்றேர் வரோதயன்", "மழையும் புரை வண்கைவானவன்" (பாண்டிக்கோவை) ; "புயல்போற் கொடைக்கை" (தண்டி. மேற்.) ; "கார்நிகர் வண்கை" (நன்.சிறப்.)
444. "தெள்ளரிச் சிலம்பார்ப்ப" (கலித். 69:8)
448.(பி-ம்.) ‘குழையிருந்த வொளிகெழு'
450. பெருங். 2. 6:20-23.
454.மாகவிசும்பு : பரி. 1:47 ; அகநா. 141:6,253:24 ; புறநா. 35:18.