32

பத்துப்பாட்டு

பழமுதிர் சோலை மலைகிழ வோனே.

  317. மலைகிழவோனே: "ஒளிறிலங் கருவிய மலைகிழ வோனே" (பெரும்பாண். 500); "நிலைபெறு தணிகை மலைகிழ வோனே" (தணிகையாறு. 417)

தொல். பெயர். சூ. 11, கல்.மேற். பெயரிடத்து னகர வீற்றயலகரம் ஒகாரமா மென்பதற்கு இவ்வடி மேற்கோள்; இ. வி. சூ. 326. உரை; நன். வி. சூ. 353.

இதன் பொருள்

திருப்பரங்குன்றம்

1. உலகமென்பதுமுதற் கணவன் (6) 1என்னுந்துணையும் ஒரு தொடர். 

உலகம் உவப்ப-சீவான்மாக்கள் உவப்ப.

உலகமென்பது பலபொருளொருசொல்லாய் நிலத்தையும் உயிர்களையும் ஒழுக்கத்தையும் உணர்த்திநிற்குமேனும் ஈண்டு உவப்பவென்றதனான், மண்ணிடத்துவாழும் சீவான்மாக்களை உணர்த்திற்று.

[வலனேர்பு திரிதரு:] ஏர்பு வலன் திரிதரு-எழுந்து 2மகாமேருவை வலமாகத்திரிதலைச்செய்யும்.

2. பலர் புகழ் ஞாயிறு-எல்லாச் சமயத்தாரும் புகழும் ஞாயிற்றை கடற் கண்டாங்கு-கடலிடத்தே கண்டாற்போல

இது வினையெச்சவுவமம்; 3"விரவியும் வரூஉ மரபின வென்ப" என்பதனால் தொழிலுவமமும் வண்ணவுவமமும் பற்றிவந்தது; என்னை? ஞாயிறு இருளைக்கெடுக்குமாறுபோலத் தன்னை மனத்தால் நோக்குவார்க்கு மாயையைக் கெடுத்தலிற் றொழிலுவமமும், தன்னைக் கட்புலனால் நோக்குவார்க்குக் 4கடலிற் பசுமையும் ஞாயிற்றின் செம்மையும

1( ) இந்த நக வளைவுக்குட்பட்ட எண்ணும், இப்படியே பின்னர் ஆங்காங்குப் பதிப்பிக்கப்படும் எண்களும் தத்தம் முன்புள்ள ‘மொழிகளையேனும், அம்மொழிகளைப் பொருளாகப் பெற்ற மொழிகளையேனுமுடைய மூலத்தின் வரியைப் புலப்படுத்தும்.

2 "ஞாயிறு போற்றுதும் ............. மேரு வலந்திரித லான்" (சிலப். மங்கல.)

3தொல்காப்பியம், உவமவியல், சூ. 2.

4 "மாக்கட னிவந்தெழுதரு, செஞ்ஞா யிற்றுக் கவினை" (புறநா. 4 : 15-16); "உததியிடை கடவுமர கதவருண குலதுரக வுபலளித கனகரத சதகோடி சூரியர்கள், உதயமென வதிகவித கலபகக மயிலின்மிசை யுகமுடிவி னிருளகல வொரு சோதி வீசுவதும்" (திருவகுப்பு. ஸ்ரீபாத.)