| மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சுடர் வாடாப் பூவி னிமையா நாட்டத்து நாற்ற வுணவி னுருகெழு பெரியோர்க்கு மாற்றரு மரபி னுயர்பலி கொடுமா | 460 | ரந்தி விழவிற் றூரியங் கறங்கத் திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித் தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத் தாமு மவரு மோராங்கு விளங்கக் | 465 | காமர் கவினிய பேரிளம் பெண்டிர் பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச் சிறந்துபுறங் காக்குங் கடவுட் பள்ளியுஞ் சிறந்த வேதம் விளங்கப்பாடி விழுச்சீ ரெய்திய வொழுக்கமொடு புணர்ந்து | 470 | நிலமமர் வையத் தொருதா மாகி யுயர்நிலை யுலக மிவணின் றெய்து மறநெறி பிழையா வன்புடை நெஞ்சிற் பெரியோர் மேஎ யினிதி னுறையுங் குன்றுகுயின் றன்ன வந்தணர் பள்ளியும் |
456. முருகு. 128, 457-8. "வாடாப் பூவி னிமையா நாட்டத்து, நாற்ற வுணவினோரும்" (புறநா. 62:16-7) 461-3. குழந்தைகளுக்குத் தாமரைப்போது : "போதவிழ் தாமரை யன்னநின், காதலம் புதல்வன்" (ஐங். 424) ; "நீரு, ளடைமறை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட, குடைநிழற் றோன்றுநின் செம்மலை" (கலித். 84:10-11) ; "பொய்கையுண் மலரென வளர்ந்து" (சீவக. 2756) 466. "பூவும் புகையும் சாவகர் பழிச்ச" (மதுரைக். 476) 470. (பி-ம்) ‘ஒரு திரமாகி' 474. மதுரைக். 488, 501-2. 455-74. "நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலு, முவணச்சேவ லுயர்த்தோ னியமமு, மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமுங், கோழிச் சேவற் கொடியோன் கோட்டமு, மறத்துறை விளங்கிய வறவோர் பள்ளியும்" (சிலப். 14:7-11) ; "நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப், பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக" (மணி. 1:54-5)
|