| சிறந்த கொள்கை யறங்கூ றவையமு நறுஞ்சாந்து நீவிய கேழ்கிள ரகலத் தாவுதி மண்ணி யவிர் துகின் முடித்து | 495 | மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி யன்பு மறனு மொழியாது காத்துப் பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த செம்மை சான்ற காவிதி மாக்களு | 500 | மறநெறி பிழையா தாற்றி னொழுகிக் குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன பருந்திருந் துகக்கும் பன்மா ணல்லிற் பல்வேறு பண்டமோ டூண்மலிந்து கவினி மலையவு நிலத்தவு நீரவும் பிறவும் | 505 | பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு |
492. அறங்கூறவையம் : "மறங்கெழு சோழ ருறந்தை யவையத், தறங்கெட வறியா தாங்கு" (நற். 400:7-8) ; "அறங்கெழு நல்லவை", (அகநா. 93:5) ; "உறந்தையாவையத், தறநின்று நிலையிற்று" (புறநா. 39:8-9) ; "அறங்கூறவையம்" (சிலப். 5:135) ; "அறநிலை பெற்ற வருள்கொ ளவையத்து" (பெருங். 1. 34:25) 491-2. "நவைநீங்க நடுவுகூறு, மவைமாந்தர்" (பு.வெ. 173) 489-92. "காய்த லுவத்த லகற்றி யொருபொருட்க, ணாய்தலறிவுடையார் கண்ணதே-காய்வதன்க, ணுற்றகுணந் தோன்றா தாகுமுவப்பதன்கட், குற்றமுந் தோன்றா கெடும்" (அறநெறிச். 22) 493. "நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பில்" (முருகு, 193) கெழுவென்னும் உரிச்சொல் நிறப்பண்பை உணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. சூ. 5, ந ; இ-வி. சூ. 283 494. மண்ணுதலென்பதற்குப் பண்ணுதலெனப் பொருள்கூறி இவ்வடியை; மேற்கோள் காட்டினர்; சீவக. 202, 735, 1808. 497. "அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை, பண்பும் பயனு மது"; (குறள், 45) 499. காவிதி மாக்கள் : "கடிநாட் செல்வத்துக் காவிதி மாக்கள்", "கணக்கருந் திணைகளுங் காவிதிக் கணமும் (பெருங். 3. 22 : 282, 5, 6 : 90) 500. "ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை" (குறள், 48) 501-2. குன்று கண்டன்ன இல் : மதுரைக். 474, 488
|