324
பவ்வே றுருவிற் காயும் பழனுங்
530கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி
மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகு
மமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறுங்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவு
535 மின்சோறு தருநர் பல்வயி னுகர
வாலிதை யெடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத்
தொல்லெ னிமிழிசை மானக் கல்லென
நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப்
b>540பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோத
மிருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்
துருகெழு பானாள் வருவன பெயர்தலிற்
பல்வேறு புள்ளி னிசையெழுந் தற்றே
யல்லங் காடி யழிதரு கம்பலை
545யொண்சுட ருருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து
சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு
குடமுதற் குன்றஞ் சேரக் குணமுத

531. (பி-ம்.) ‘குறிமுறி யடரும்'

533. ஊன்சோறு : மதுரைக் 141, குறிப்புரையைப் பார்க்க.;

534. வீழ்ந்த கிழங்கு : "விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை" (மலைபடு. 128) ; "கிழங்குகீழ் வீழ்ந்து" (நற். 328:1) ; "வள்ளிகீழ் வீழா" (கலித். 39:12) ; "கொழுங்கடி வள்ளிக் கிழங்கு வீழ்க் கும்மே" (புறநா. 109:6)

540. கடற்குட்டம் ; "கடற்குட்டம் போழ்வர் கலவர்" (நான்மணிக். 16)

543-4. "பழுமரத் தீண்டிய பறவையி னெழூஉ, மிழுமென் சும்மை" (மணி. 14:26-7) ; "முட்டிலா மூவறு பாடை மாக்களாற், புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய, மட்டிலா வளநகர்", "சீர்கெழுவளமனை திளைத்து மாசனம் ...................... பார்கெழு பழுமரப் பறவை யொத்தவே" (சீவக. 93, 828) : "களனவி லன்னமே முதல கண்ணகன், றளமலர்ப் புள்ளொடு தயங்கி யின்னதோர், கிளவியென் றறிவருங் கிளர்ச்சித் தாதலான்,
வளநகர்க் கூலமே போலு மாண்பது" (கம்ப. பம்பை. 7)