| னாண்முதிர் மதியந் தோன்றி நிலாவிரிபு பகலுரு வுற்ற விரவுவர நயந்தோர் | 550 | காத லின்றுணை புணர்மா ராயிதழ்த் தண்ணறுங் கழுநீர் துணைப்ப விழைபுனையூஉ நன்னெடுங் கூந்த னறுவிரை குடைய நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக மென்னூற் கலிங்கங் கமழ்புகை மடுப்பக் | 555 | பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர் நெடுஞ்சுடர் விளக்கங் கொளீஇ நெடுநக ரெல்லை யல்லா நோயொடு புகுந்து கல்லென் மாலை நீங்க நாணுக்கொள வேழ்புணர் சிறப்பி னின்றொடைச் சீறியாழ் | 560 | தாழ்பயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து வீழ்துணை தழீஇ வியல்விசும்பு கமழ நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட் டாய்கோ லவிர்தொடி விளங்க வீசிப் போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ | 565 | மேதகு தகைய மிகுநல மெய்திப் பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்; திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக் கொண்டன் மலர்ப்புதன் மானப்பூ வேய்ந்து நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி |
548-9. நிலாவிரிபு பகலுருவுற்ற இரவு : "பகலுரு வுறழ்நிலாக் கான்று விசும்பி, னகல்வாய் மண்டில நின்றுவிரி யும்மே" (அகநா. 122:10-11) 551. "யான் போது துணைப்ப" (அகநா. 117:11) 554. "பூந்துகில் கழும வூட்டும் பூம்புகை" (சீவக. 71) 555-6. மகளிர் மாலையில் விளக்கேற்றுதல் : "பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி" (குறிஞ்சிப். 224) ; "பைந்தொடி மகளிர் பலர் விளக் கெடுப்ப" (மணி. 5:134) ; "மாலை மணிவிளக்கங் காட்டி ....................... கொடையிடையார் தாங்கொள்ள" (சிலப். 9:3-4) 558 (பி-ம்.) ‘நாணுக் கொளீஇ' 560. (பி-ம்.) ‘தாழ்பெயல்' 562. "மார்விற்றார் கோலி மழை" (பு . வெ. 204) 563. "செறிதொடி தெளிர்ப்ப வீசி" (நற். 20:5)
|