570 | மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்து சேயரு நணியரு நலனயந்து வந்த விளம்பல் செல்வர் வளந்தப வாங்கி நுண்டா துண்டு வறும்பூத் துறக்கு மென்சிறை வண்டின மானப் புணர்ந்தோர் | 575 | நெஞ்சே மாப்ப வின்றுயி றுறந்து பழந்தேர் வாழ்க்கைப் பறவை போலக் கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய மணம்புணர்ந் தோங்கிய வணங்குடை நல்லி லாய்பொன் னவிர்தொடிப் பாசிழை மகளி | 580 | ரொண்சுடர் விளக்கத்துப் பலருடன் றுவன்றி நீனிற விசும்பி லமர்ந்தன ராடும் வானவ மகளிர் மானக் கண்டோர் நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர் யாம நல்யாழ் நாப்ப ணின்ற | 585 | முழவின் மகிழ்ந்தன ராடிக் குண்டுநீர்ப் பனித்துறைக் குவவுமணன் முனைஇ மென்றளிர்க் கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர நெடுந்தொடர்க் குவளை வடிம்புற வடைச்சி |
570. (பி-ம்.)‘கவவுக் கவர்ந்து' "கோதை மார்பினை, நல்லகம் வடுக்கொள முயங்கி" (அகநா. 100:2-3) 572-5. பரத்தையர்க்கு வண்டு : "நறுந்தா துண்டு நயனில் காலை, வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்", "பயன்பல வாங்கி, வண்டிற் றுறக்குங், கொண்டி மகளிரை" (மணி. 18:19-20, 108-9) 576. பொருந. 64-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. பெருங். 3.1 : 169-74. 581. நீனிற விசும்பு : முருகு. 116-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.; 582. (பி-ம்.) ‘வானரமகளிர்' 583. (பி-ம்.) ‘நடுக்குறூஉங்கொண்டி' கொண்டி மகளிர் : மணி. 18:109. 584. யாமநல்யாழ் : "விரல்கவர்ந் துழந்த கவர்வி னல்யாழ், யாமமுய் யாமை" (நற். 335:9-10) ; "விளரிப்பாலையிற் றோன்றும் யாமயாழ்" (பரி. 11:129, பரிமேல்.) ; "யாமயாழ் மழலையான்" (கம்ப. நாடவிட்ட. 34) 588. "குறுஞ்சுனைக் குவளையடைச்சி", "நீலமடைச்சி" (நற். 204:3, 357:8) ; "கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சி" (குறுந். 80:1)
|