| மணங்கமழ் மனைதொறும் பொய்த லயரக் | 590 | கணங்கொ ளவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய வோண நன்னாட் கோணந் தின்ற வடுவாழ் முகத்த சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை மறங்கொள் சேரி மாறுபொரு செருவின் | 595 | மாறா துற்ற வடுப்படு நெற்றிச் சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர் கடுங்களி றோட்டலிற் காணுந ரிட்ட நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக் கடுங்கட் டேறன் மகிழ்சிறந்து திரிதரக் | 600 | கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து பணைத்தேந் திளமுலை யமுத மூறப் புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு வளமனை மகளிர் குளநீ ரயரத் திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணிக் | 605 | குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி நுண்ணீ ராகுளி யிரட்டப் பலவுட னொண்சுடர் விளக்க முந்துற மடையொடு நன்மா மயிலின் மென்மெல வியலிக் |
591. "ஓணத் தானுல காளுமென் பார்களே", "நீ பிறந்த திருவோணம்" (திவ். பெரியாழ். 1. 1:3, 2. 4:2) ; "ஓணன் பொரக்கருணை யூக்கினார்" (ஆனந்த. வண்டு. 491) 600. நீதிநெறி. 100 602-3. "புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கந், தீர்வினை மகளிர் குளனா டரவமும்" (மணி. 7:75-6) என்பதையும் அதன் குறிப்புரையையும் பார்க்க. 604. "சேக்கை நல்யாழ் செவ்வழி பண்ணி" (பெருங். 1. 33:89). செவ்வழி மாலைக்குரிய பண் : புறநா. 149. 605-6. "நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கி" (புறநா. 64:1 ; குழல்வழி நின்றதி யாழே யாழ்வழித், தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப், பின்வழி நின்றது முழவே முழவொடு, கூடிநின்றிசைத்த தாமந் திரிகை" (சிலப். 3:139-42) 608. மயிலின் இயலி : முருகு. 205 ; பெரும்பாண். 330-31-ஆம் அடிகளின் குறிப்புரையைப் பார்க்க. மென்மெலவியலி : "மென்மெ
|