| கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது | 610 | பெருந்தோட் சாலினி மடுப்ப வொருசா ரருங்கடி வேலன் முருகொடு வளைஇ யரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக் கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் சீர்மிகு நெடுவேட் பேணித் தழூஉப்பிணையூஉ | 615 | மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறு முரையும் பாட்டு மாட்டும் விரைஇ வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப் பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாட் சேரி விழவி னார்ப்பெழுந் தாங்கு | 620 | முந்தை யாமஞ் சென்ற பின்றைப் பணிலங் கலியவிந் தடங்கக் காழ்சாய்த்து நொடைநவி னெடுங்கடை யடைத்து மடமத ரொள்ளிழை மகளிர் பள்ளி யயர நல்வரி யிறாஅல் புரையு மெல்லடை | 625 | யயிருருப் புற்ற வாடமை விசயங் கவவொடு பிடித்த வகையமை மோதகந் தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவன ருறங்க விழவி னாடும் வயிரியர் மடியப் பாடான் றவிந்த பனிக்கடல் புரையப் | 630 | பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்பப் |
லம்மலர் மேன்மிதித் தேகினாள்" (சீவக. 1336) ; "சொல்லு மாடுமென்மெல வியலும்" (தொல். களவு. சூ. 10, ந. மேற்.) "மென்மெல வியலி வீதி போந்து" (பெருங்4. 17:99) 612. அரிக்கூடின்னியம் : "அரிக்கூடு மாக்கிணை" (புறநா. 378:8) 614. நெடுவேள் : முருகு. 211, பெரும்பாண். 75-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 614-5. தழூஉப் பிணையூஉ நின்ற குரவை : மதுரைக். 159-60-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 618. (பி-ம்.) ‘பெரும்பெயர்' 624. அடைக்கு இறால் : "மெழுகு மெல்லடை" (புறநா. 103:10); "தேனி றாலன தீஞ்சுவை யின்னடை" (சீவக. 2674) 628. புறநா. 29:22-3, 629-30 : நற். 18:6-7.
|