| பானாட் கொண்ட கங்கு லிடையது பேயு மணங்கு மிருவுகொண் டாய்கோற் கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப விரும்பிடி மேஎந்தோ லன்ன விருள்சேர்பு | 635 | கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத் தொடலை வாளர் தொடுதோ லடியர் குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச் சிறந்த கருமை நுண்வினை நுணங்கற னிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர் | 640 | மென்னூ லேணிப் பன்மாண் சுற்றினர் நிலனக ழுளியர் கலனசைஇக் கொட்குங் கண்மா றாடவ ரொடுக்க மொற்றி வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத் துஞ்சாக் கண்ண ரஞ்சாக் கொள்கைய | 645 | ரறிந்தோர் புகழ்ந்த வாண்மையர் செறிந்த நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சி யூர்காப் பாள ரூக்கருங் கணையினர் தேர்வழக்கு தெருவி னீர்திரண் டொழுக மழையமைந் துற்ற வரைநா ளமயமு | 650 | மசைவில ரெழுந்து நயம்வந்து வழங்கலிற் கடவுள் வழங்குங் கையறு கங்குலு மச்ச மறியா தேம மாகிய |
636. தொடுதோலடியார் : "தொடுதோன் மரீஇய வடுவாழ் நோனடி" (பெரும்பாண். 169) 635-6. "குன்று துகளாக்குங் கூர்ங்கணையான்" என்பது பாரதம் (தொல். புறத். சூ. 21, ந. மேற்.) ; "வேறிரண் டனவும் வில்லுமிடைந்தவும் வெற்பென் றாலுங், கூறிரண் டாக்கும் வாட்கைக் குழுவையுங் குணிக்க லாற்றேம்" (கம்ப. பாச. 6) 642. "அகன்றுகண் மாறி" (மணி. 3:40) 639-42. "நிலனக ழுளிய னீலத் தானையன், கலனசை வேட்கையிற் கடும்புலி போன்று" (சிலப். 16:204-5) சிலப். 16 : 204. 11, அடியார், மேற். 643-4. கள்வர்க்குப்புலி : கலித். 4 : 1-2. 645. (பி-ம்.) ‘ஆண்மையிற் சிறந்த'
|