| மற்றை யாமம் பகலுறக் கழிப்பிப் போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத் | 655 | தாதுண் டும்பி போது முரன்றாங் கோத லந்தணர் வேதம் பாடச் சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி யாழோர் மருதம் பண்ணக் காழோர் கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர்ப | 660 | பணைநிலைப் புரவி புல்லுணாத் தெவிட்டப் பல்வேறு பண்ணியக் கடைமெழுக் குறுப்பக் கள்ளோர் களிநொடை நுவல வில்லோர் நயந்த காதலர் கவவுப்பிணித் துஞ்சிப் புலர்ந்துவிரி விடிய லெய்த விரும்பிக் | 665 | கண்பொரா வெறிக்கு மின்னுக்கொடி புரைய வொண்பொ னவிரிழை தெழிப்ப வியலித் திண்சுவர் நல்லிற் கதவங் கரைய வுண்டுமகிழ் தட்ட மழலை நாவிற் பழஞ்செருக் காளர் தழங்குகுர றோன்றச் | 670 | சூதர் வாழ்த்த மாகதர் நுவல |
635. "பகுக்கப்படுதலிற் பகல் ; ‘மற்றை யாமம் பகலுறக்கழிப்பி' என்பதுமது" (சிலப். 4:81, அரும்பத. அடியார்.) 655. சீவக. 893, ந. மேற். 656. விடியலில் வேதம் பாடல் : "பூவினுட் பிறந்தோ னாவினுட் பிறந்த, நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப, ஏம வின்றுயி லெழுதலல்லதை, வாழிய வஞ்சியுங் கோழியும் போலக், கோழியி னெழாதெம் பேரூர் துயிலே" (பரி. தி. 27:7-11) 655-6. வில்லைப் புராணம், 257. 658. மருதப்பண் காலைக்குரியது : புறநா. 149 ; சீவக. 1991. 659. (பி-ம்.) ‘கவழ மகைப்ப' "கல்லா விளைஞர் கவ்ளங் கைப்ப" முல்லை. 36. 660. (பி-ம்.) ‘தெவிட்டிப்' "பணைநிலைப்புரவி : மணி 7:117. 662. (பி-ம்) ‘கள்கொடை நுவல நல்லோர்' 665. (பி-ம்) ‘கண்பொரு பெறிக்கும்' 666. (பி-ம்) ‘ஒன்ப லவிரிழை தெளிர்ப்ப வியலி' 669. பழஞ்செருக்கு : மலைபடு. 173 670. (பி-ம்) ‘சூதரேத்த'
|