331
வேதா ளிகரொடு நாழிகை யிசைப்ப
விமிழ்முர சிரங்க வேறுமாறு சிலைப்பப்
பொறிமயிர் வாரணம் வைகறை யியம்ப
யானையங் குருகின் சேவலொடு காம
675ரன்னங் கரைய வணிமயி லகவப்
பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக்
கூட்டுறை வயமாப் புலியொடு குழும
வான நீங்கிய நீனிற விசும்பின்
மின்னுநிமிர்ந் தனைய ராகி நறவுமகிழ்ந்து
680மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த
பரூஉக்கா ழாரஞ் சொரிந்த முத்தமொடு
பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன
வம்மென் குரும்மைப் காய்படுபு பிறவுந்
தருமணன் முற்றத் தரிஞிமி றார்ப்ப
685மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப
விரவுத்தலைப் பெயரு மேம வைகறை
மைபடு பெருந்தோண் மழவ ரோட்டி

671. (பி-ம்) ‘வேதாளியர்' நாழிகையிசைத்தல் : முல்லை. 55-8, குறிப்புரையைப் பார்க்க. 

670-71. சூதர், மாகதர், வேதாளிகர் : சிலப். 5:48 ; மணி. 28:50. சிலப். 5:49, அடியார். மேற். 

673. பொறிமயிர் வாரணம் : மணி. 7:116

673-4. யானையங்குருகு : "யானையங் குருகின் கானலம் பெருந்தோடு" (குறுந். 34:4-5) ; "களிமயில், குஞ்சரக் குரல குருகொ டாலும் (அகநா. 145:14-5) ; "கீசுகீ சென்றெங்கு யானைச் சாத்தன் கலந்து" (திருப்பாவை, 7)

678. நீனிற விசும்பு : முருகு. 116, குறிப்புரையைப் பார்க்க. 

682. (பி-ம்) ‘நிலம்படுபுக்க' 680-82. சீவக. 72.

683. (பி-ம்) ‘குருப்பைக்காயும்' 

684. தருமணன் முற்றம் : நெடுநல். 90 ; நற். 143:2 ; அகநா. 187:9 ; பெருங். 1. 34:40.

686. ஏமவைகறை : "ஏமவைகல்" குறுந். கடவுள் ; பரி. 17:53. சிலப். 4.:80.

687. மழவரோட்டி : "உருவக் குதிரை மழவ ரோட்டிய" (அகநா. 1:2)