332
யிடைப்புலத் தொழிந்த வேந்துகோட் டியானை
பகைப்புலங் கவர்ந்த பாய்பரிப் புரவி
690வேல்கோ லாக வாள்செல நூறிக்
காய்சின முன்பிற் கடுங்கட் கூளிய
ரூர்சுடு விளக்கிற் றந்த வாயமு
நாடுடை நல்லெயி லணங்குடைத் தோட்டி
நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
695நாடர வந்த விழுக்கல மனைத்துங்
கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாஅங்
களந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ளுலகங் கவினிக் காண்வர
மிக்குப்புக ழெய்திய பெரும்பெயர் மதுரைக்
700சினைதலை மணந்த சுரும்புபடு செந்நீ
யொண்பூம் பிண்டி யவிழ்ந்த காவிற்
சுடர்பொழிந் தேறிய விளங்குகதிர் ஞாயிற் 
றிலங்குகதி ரிளவெயிற் றோன்றி யன்ன
தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை
705நிலம்விளக் குறுப்ப மேதகப் பொலிந்து
மயிலோ ரன்ன சாயன் மாவின்

688. இடைப்புலத்தொழிந்த : மதுரைக். 349

692. ஊர்சுடுவிளக்கு : புறநா. 7:8 

691-2. "அரவூர் மதியிற் கரிதூர வீம, இரவூ ரெரிகொளீஇக் கொன்று-நிரைநின்ற, பல்லான் றொழுவும் பகற்காண்மார் போர்கண்டோர், கொல்வார்ப் பெறாஅர் கொதித்து" (தொல். புறத். சூ. 3, ந. மேற்.) ; மதுரைக். 126-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 

694. கைதொழூஉப் பழிச்சி : பெரும்பாண். 463

695-7. மலைபடு. 526-9

693-7. மதுரைக். 149-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 

698. "வானத் தன்ன வளநகர்" (மதுரைக். 741) ; "மாந்தரஞ் சேர லிரும்பொறை யோம்பிய நாடே, புத்தே ளுலகத்தற்று" (புறநா. 22:34-5)

699. "மலிபுகழ்க்கூடல்" (மதுரைக். 429)

706. (பி-ம்) ‘மயிலோடன்ன'

மயிலோரன்னசாயல் : முருகு. 205-ஆம் அடியின் குறிப்புரையையும், சிறுபாண். 16-ஆம் அடியின் குறிப்புரையையும் பார்க்க.