| தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத் தீர்க்கி னரும்பிய திதலையர் கூரெயிற் றொண்குழை புணரிய வண்டாழ் காதிற் | 710 | கடவுட்கயத் தமன்ற சுடரிதழ்த் தாமரைத் தாதுபடு பெரும்போது புரையும் வாண்முகத் தாய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து கோதையிற் பொலிந்த சேக்கைத் துஞ்சித் திருந்துதுயி லெடுப்ப வினிதி னெழுந்து | 715 | திண்கா ழார நீவிக் கதிர்விடு மொண்கா ழாரங் கவைஇய மார்பின் வரிக்கடைப் பிரச மூசுவன மொய்ப்ப வெருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியற் பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம் | 720 | வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச் சோறமை வுற்ற நீருடைக் கலிங்க முடையணி பொலியக் குறைவின்று கவைஇ வல்லோன் றைஇய வரிப்புனை பாவை முருகியன் றன்ன வுருவினை யாகி | 725 | வருபுணற் கற்சிறை கடுப்ப விடையறுத் தொன்னா ரோட்டிய செருப்புகன் மறவர் |
706-7. மகளிர்மேனிக்கு மாந்தளிர் : முருகு. 143-4-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. 707-9. "ஈன்றவ டிதலையோ லீரீப்பெய்யுந் தளிரோடும்" (கலித். 32-7) 715-6. (பி-ம்) ‘கதிர்விடுபொண்காழ்' "தன்கடற் பிறந்த முத்தி னாரமு, முனைதிறை கொடுக்குந் துப்பிற் றன்மலைத், தெறலரு மரபிற் கடவுட் பேணிக், குறவர் தந்த சந்தி னாரமு, மிருபே ராரமு மேழில்பெற வணியுந், திருவீழ் மார்பிற் றென்னவன்" (அகநா. 13:1-6); "கோவா மலையாரங் கோத்த கடலாரம் ........................ தென்னர் கோன் மார்பினவே" (சிலப். 17 : உள்வரி. 1) 718. விரவுப்பூந்தெரியல் : மதுரைக். 745. 720-21. (பி-ம்) ‘சுடர, வுறையமைவுற்ற சோறுடைக்கலிங்கம்' 723. "வல்லோன் றைஇய பாவைகொல்" (கலித். 56:7)
|