| வாள்வலம் புணர்ந்தநின் றாள்வலம் வாழ்த்த வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின் மாதாங் கெறுழ்த்தோண் மறவர்த் தம்மின் | 730 | கல்லிடித் தியற்றிய விட்டுவாய்க் கிடங்கி னல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின் கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரச மோவில கறங்க |
727. (பி-ம்) ‘தாள்வலம் பழிச்ச' 726-7. சிறுபாண். 212-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 725-8. "அவர்படை வரூஉங் காலை நும்படைக், கூழை தாங்கிய வகல்யாற்றுக், குன்றுவிலங்கு சிறையி னின்றனை", "வேந்துடைத்தானை முனைகெட நெரிதர, வேந்துவாள் வலத்த னொருவ னாகித், தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற், காழி யனையன்" (புறநா. 169:3-5, 3301 -4) ; "பொருபடையுட் கற்சிறைபோன், றொருவன் றாங்கிய நிலையுரைத்தன்று", "செல்கணை மாற்றிக் குருசில் சிறை நின்றான்" (பு. வெ. 54, 263) 730. "கல்லகழ் கிடங்கின்" (மலைபடு. 91) ; "கல்லறுத் தியற்றிய வல்லுவர்ப் படுவில்" (அகநா. 79:3) ; "பாருடைத்த குண்டகழி" (புறநா. 14:5) ; "பாரெலாம் போழ்ந்தமா கிடங்கு" (கம்ப. நகரப். 17) 731. கலித். 92:62, ந, சீவக. 906, ந. மேற். 733. (பி-ம்) ‘மயிர்க்கண் முரச மோவாது சிலைப்ப' 732-3. "ஓடா நல்லேந் றுரிவை தைஇய, பாடுகொண் முரசம்" (அகநா. 334:1-2) ; "விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்", "மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பி, னண்ண னல்லே றிரண்டுடன் மடுத்து, வென்றதன் பச்சை சீவாது போர்த்த, திண்பிணி முரசம்" (புறநா. 63:7, 288:1-4) : "மயிர்க்கண் முரசொடு வான்பலியூட்டி", "மயிர்க்கண் முரசு" (சிலப். 5:88, 91) "ஏற்றுரி போர்த்த முரசு" (மணி. 1:29-31) : "ஏற்றுரி முரசம்", "ஏற்றுரி போர்த்த வள்வா ரிடிமுரசு", "புனைமருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற, கனைகுர லுருமுச் சீற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த, துனைகுரன் முரசத் தானை" (சீவக. 2142, 2152, 2899) ; "ஏற்றுரியி, னிமிழ்முரசம்" (யா. வி. செய், சூ. 40, மேற். "தாழிரும்") ; "சாற்றிடக் கொண்ட வேற்றுரி முரசம்" "ஏற்றுரி முரசி னிறைவன்", "ஏற்றுரி போர்த்த ............... முரசம்" (பெருங். 1. 38:100, 43:195, 2.2:26-9) "மயிர்க்கண் முரச முழங்க" (பு. வெ. 171)
|