335
வெரிநிமிந் தன்ன தானை நாப்பட்
735பெருநல் யானை போர்க்களத் தொழிய
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை
நீர்யா ரென்னாது முறைகருதுபு சூட்டிக்
காழ்மண் டெஃகமொடு கணையலைக் கலங்கிப் 
740 பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து
வானத் தன்ன வளநகர் பொற்ப
நோன்குறட் டன்ன வூன்சாய் மார்பி
னுயர்ந்த வுதவி யூக்கலர்த் தம்மி
னிவந்த யானைக் கணநிறை கவர்ந்த
745புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியற்
பெருஞ்செ யாடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக வேனோருந் தம்மென
வரையா வாயிற் செறாஅ திருந்து

"மயிர்க்கண் முரசு" என்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் (சிலப். 5:88, அடியார்.)

734, (பி-ம்) ‘எரிபரந்தன்ன', ‘எரி நிகழ்ந்தன்ன' படைக்கு நெருப்பு : "கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினும்" (பு. வெ. 55)

737. பொலம்பூந்தும்பை : பதிற். 45:1 ; புறநா. 2:14, 22:20, 97:15.

739. காழ்மண்டெஃகம் : காழ்மண் டெஃகங் களிற்றுமுகம் பாய்ந்தென" (மலைபடு. 129) ; "காழ்மண் டெஃகமொடு காற்படை பரப்பி" (பெருங். 3. 29:212)

740. (பி-ம்) ‘வளங்கெழு நகர்நோன்' வானத்தன்ன நகர் : மதுரைக் 698-ஆம் அடியின் குறிப்புரையைப்பார்க்க. 

742. "எஃகா டூனங் கடுப்பமெய் சிதைந்து" (பதிற். 67:17) ; "கார்சூழ் குறட்டின் வேனிறத் திங்க", "தச்ச னடுத்தெறி குறட்டினின்றுமாய்ந் தனனே" (புறநா. 283:8, 290:4-5) ; "வீரவேலுடம்பெலாஞ் சூழ வெம்புலால், சோருஞ்செங் குருதியுண் மைந்தர் தோன்றுவார், ஒருமே லொண்மணிச் சூட்டு வைக்கிய, வாரமே யமைந்த தேர்க் குழிசி யாயினார்" (சீவக. 790)

747. பொருந. 101, ந. மேற்.