336
பாணர் வருக பாட்டியர் வருக
750யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென
விருங்கிளை புரக்கு மிரவலர்க் கெல்லாங்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசிக்
களந்தோறுங் கள்ளரிப்ப
மரந்தோறு மைவீழ்ப்ப
755 நிணவூன்சுட் டுருக்கமைய
நெய்கனிந்து வறையார்ப்பக்
குரூஉக்குய்ப்புகை மழைமங்குலிற்
பரந்துதோன்றா வியனகராற்
பல்சாலை முதுகுடுமியி
760னல்வேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பி
னிலந்தரு திருவி னெடியோன் போல
வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர்
765பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் றோன்றி
யரியதந்து குடியகற்றிப்
பெரியகற் றிசைவிளக்கி

752. கொடுஞ்சி நெடுந்தேர் : பெரும்பாண். 416-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 

பரிசிலர்க்குத் தேர் கொடுத்தல் : மதுரைக். 223-4-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. 

தேரோடுகளிறுதருதல் : சிறுபாண். 142-3-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. 

களிறுதருதல் : பொருந. 125-6-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

755. (பி-ம்) ‘ஊன்சூட்டு'

758. ‘தோன்றிய வியன்சாரல்'

759-60. (பி-ம்) ‘முதுகுடுமிநல்'

760-61. "பல்கேள்வித் துறைபோகிய, தொல்லாணை நல்லாசிரியர்" (பட்டினப். 169-70)

763. மதுரைக். 60-61. "நிலந்தரு திருவி னெடியோய்" (பதிற். 82:16) ; "நிலந்தரு திருவின் ................. கௌரியர்", "நிலந்தரு திருவி னெடியோன் றனாது" (சிலப். 15:1-2, 28:3)