337
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீ னடுவட் டிங்கள் போலவும்
770பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப்
பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
பெரும்பெயர் மாறன் றலைவ னாகக்
கடந்தடு வாய்வா ளிளம்பல் கோச
ரியனெறி மரபினின் வாய்மொழி கேட்பப்
775பொலம்பூ ணைவ ருட்படப் புகழ்ந்த
மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன
ரவரும் பிறருந் துவன்றிப்
பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த
விலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
780மணங்கமழ் தேறன் மடுப்ப நாளு
மகிழ்ந்தினி துறைமதி பெரும
வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே.

768. பொருந. 135-6 ; பெரும்பாண். 441-2.

769. சிறுபாண். 219-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

769-70. சிறுபாண். 219-20-ஆம் அடிகளின் குறிப்புரையைப் பார்க்க.

773. கோசர் : புறநா. 169:9-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

775. (பி-ம்.) ‘உளப்பட'

779-81. பொருந. 85-8-ஆம் அடிகளின் கீழ்க்குறிப்பைப் பார்க்க ; "ஓண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய, தண்கமழ் தேறன் மடுப்ப மகிழ்சிறந், தாங்கினி தொழுகுமதி பெரும" (புறநா. 24:31-3) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.

782. நல்லூழி : மதுரைக். 21.