8. இரவு செய்யும் வெள் திங்களும்-இராப்பொழுதை உண்டாக்கும் வெள்ளிய மதியும், 9. மை தீர்ந்து கிளர்ந்து விளங்க-குற்றமற்றுத் தோன்றிவிளங்க, 10. மழை தொழில் உதவ-மேகம் தானே பெய்தற்றொழிலை வேண்டுங்காலத்தே தர, 1உழவுத்தொழிற்கு உதவவென்றுமாம். மாதிரம் கொழுக்க-திசைகளெல்லாம் தழைப்ப, மலைகள் விளைந்துகொழுக்க வென்றுமாம். 11. [தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய :] தொடுப்பின் வித்தியது ஆயிரம் விளைய-ஒருவிதைப்பின்கண்ணே விதைத்தவிதை ஆயிரமாக விளைய, 12. நிலனும்-விளைநலங்களும், மரனும்-மரங்களும், பயன் எதிர்பு தந்த-பல்லுயிர்க்கும் தம்பயன்கொடுத்தலை 2ஏறட்டுக்கொண்டு தழைப்ப, 13. நோய் இகந்து 3நோக்கு விளங்க-மக்கட்குப் 4பசியும் பிணியும் நீங்கி அழகு விளங்க, 14-5. [மேதக மிகப்பொலிந்த, வோங்குநிலை வயக்களிறு :] மிக பொலிந்த ஓங்கு நிலை வய களிறு மே தக-அறவும் பொலிவுபெற்ற 5உலகத்தைத் தாங்குதல் வளருந்தன்மையையுடைய வலியையுடையவாகிய திக்கயங்கள் இவர் தாங்குதலின் வருத்தமற்று மேம்பாடுதக,
1 ";காலை மாரி பெய்துதொழி லாற்றி" (பதிற். 84:21) ; "ஏரினாழஅ ருழவர் புயலென்னும், வாரி வளங்குன்றிக் கால்" (குறள், 14) 2 ஏறட்டுக்கொள்ளல்-மேற்கொள்ளல் ; மதுரைக். 147, ந. 3 நோக்கு-அழகு : "பெரிய நோக்கின-பெரிய அழகையுடைய" (சீவக. 1461, ந.) 4 ";நோயொடு பசியிகந் தொரீஇப், பூத்தன்று பெருமநீ காத்த நாடே", "நீபுறந் தருதலி னோயிகந் தொரீஇய, யாணர்நன் னாடும்" (பதிற். 13:27-8, 15:33-4) ; "பசியும் பிணியும் பகையு நீங்கி" (சிலப். 5:72, மணி. 1:70) ; "பசிபகை யானதுந் தீங்கு நீங்க" (இரண்டாங் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி) 5 ";கூறொன்றத், தாங்கிப் பொறையாற்றாத் தத்தம் பிடர்நின்றும், வாங்கிப் பொது நீக்கி மண்முழுதும்-ஓங்கிய, கொற்றப் புயமிரண்டாற் கோமா னகளங்கன், முற்றப் பரித்ததற்பின் முன்புதாம்-உற்ற, வருத்த மறமறந்து மாதிரத்து வேழம், பருத்த கடாந்திறந்து பாய" (விக்கிரம உலா) ; கம்ப. 2. மந்திரப், 16-ஆஞ் செய்யுளைப் பார்க்க.
|