வியன்ஞாலத்திடத்தே (4) மழைதொழிலுதவ (10) நாண்மீன் நெறி யொழுக (6) ஞாயிறும் (7) திங்களும் (8) விளங்க (9) நோக்கு விளங்கக் (13) களிறு (15) மேதக (14) நன்மாந்தரோடே (20) ஊழி அடிப்பட்டு நடக்கும்படி (21) மீக்கூற (22) முந்நீர்வரம்பாக (2) உலக மாண்ட உயர்ந்தோர்மருக (23) என முடிக்க. 1இவர்கள் தருமத்தில் தப்பாமல் நடத்தவே இக்கூறியவையும் நெறிதப்பாமல் நடக்குமென்றார். 24-5. பிணம் கோட்ட களிறு 2குழும்பின் நிணம் வாய் பெய்த பேய் மகளிர் - பிணங்களையுடைய கொம்புகளையுடையனவாய்ப் பட்ட ஆனையினுடைய திரளின் நிணத்தைத்தின்ற பேய்மகளிருடைய துணங்கை (26) 26. இணை ஒலி இமிழ் 3துணங்கை சீர்-இணைத்த ஆரவாரம் முழங்குகின்ற துணங்கைக்கூத்தின் சீர்க்கு, 27. பிணை யூபம் எழுந்து ஆட-செறிந்த குறைத்தலைப்பிணம் எழுந்து நின்று ஆடுகையினாலே, 28. அஞ்சு வந்த போர்க்களத்தான்-4அஞ்சுதலுண்டான போர்க்களத்திடத்தே, 29. ஆண் 5தலை அணங்கு அடுப்பின்-ஆண்மக்கள் தலையாகிய நோக்கினாரை வருத்தும் அடுப்பின்கண்ணே,
1 ";இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட, பெயலும் விளையுளுந்தொக்கு" (குறள், 545) ; "கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும், கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்" (மணி. 7:8-9) ; "கோணிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி, நீணில மாரியின்றி விளைவஃகிப் பசியு நீடிப், பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந்தறங்கண் மாறி, யாணையிவ் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான்" (சீவக. 255) 2 குழும்பு : இக்காலத்துக் கும்பு என மருவிவழங்கும். 3 துணங்கையின் இயல்பை, முருகு. 56-ஆம் அடியின் உரையினால் அறியலாகும். 4 பேய் ஆடியயரும் இடங்கள் அச்சம் தருவனவாதலை மணிமேகலையில், "கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்துத், தண்டாக் களிப்பினாடுங் கூத்துக், கண்டனன் வெரீஇக் கடுநவை யெய்தி, விண்டோர் திசையின் விளித்தனன் ............... பேய்க்கென் னுயிர்கொடுத் தேனென" (6:125-30) எனவரும் பகுதியிற் கூறப்படுஞ் செய்தியாலறியலாகும். 5 தலையைப் பேய்கள் அடுப்பாகக் கோடல் ; "அரக்கர் முடிகளையடுப்பு வகிர்வன", "முடித்தலை யொப்ப வடுப்பென வைத்து" (திருவகுப்பு, பொருகளத், செருக்களத்.)
|