போக்கின கிட்டுதற்கரிய வலியினையுடைய பழமைமுதிர்ந்த அகத்தியன் பின்னே எண்ணப்பட்டுச் சான்றோனாயிருத்தற்கு மேவின ஒப்பற்றவனே, "திசைநிலைக் கிளவியி னாஅ குநவும்" (தொல். எச்ச. சூ. 53) என்றதனால், இராவணன் தென்றிசை யாண்டமைபற்றித் 1தென்னவனென்றார் ; இப்பெயர் பாண்டியற்கும் 2கூற்றுவற்கும் ஏற்றுநின்றாற்போல. அகத்தியனைத் தென்றிசையுயர்ந்த நொய்ம்மைபோக இறைவனுக்குச் சீரொப்ப இருந்தா னென்பதுபற்றிக் கடவுளென்றார். இராவணனாளுதல் பாயிரச்சூத்திரத்து 3உரையாசிரியர் கூடிய உரையானுமுணர்க. இனி, "முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கா, லிப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய, வக்கடவுண் மற்றக் கடவுள்" (கலித். 93:11-3) என 4இருடிகளையும் கடவுளென்று கூறியவாற்றானும் காண்க. இதனால், 5அகத்தியனுடன் தலைச்சங்கத்துப் பாண்டியனிருந்து தமிழாராய்ந்த சிறப்புக்கூறினார். 6 கூற்றுவனையுதைத்த கடவுளென்று இறைவனாக்கி, அவன்பின் னரென்றது அகத்தியனையென்று பொருள்கூறின், இறைவனுக்குத்
தமிழின் பொதியமால் வரைபோ லிசைக்குருகாது" (சோணசைல. 26) என்பதனாலும், அகத்தியர் அதனையுருக்கியது, "மலை, முன்னாளுருக்கு முனிநிகர்வை" (வெங்கையுலா, 319) என்பதனாலும், இராவணனை இசைபாடி அடக்கியது, "பொதியிலின்கண் இருந்து இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி" (தொல். பாயிரம். ந.), "இசைக்குருகப் படுசிலை-இராவணனைப்பிணிக்கக் குறுமுனிபாடும் இசைக்கு உருகப்பட்ட பொதியின்மலை" (தஞ்சை. 345, உரை) என்பவற்றாலும் உணரப்படும். 1 "தென்னவன் மலையெடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு" (தே. திருநா. திருக்கச்சிமேற்றளி) 2 தென்னவனென்னும் பெயர் கூற்றுவனுக்காதல் "சட்டத் தென்னவன் றன்கடா வேந்தனை, வெட்டி" (தக்க. 684) ; "காலத் தென்னவன் மகிடமேறான்" அருணாசல. பாகம்பெற்ற. 4 ; பெரியாழ். 4.5:7. 3 உரையாசிரியரென்னும் பெயர்க்குரியராக இப்பொழுது கருதப்படும் இளம்பூரணர் உரையில் இச்செய்தி காணப்படாமை ஆராய்ச்சிக்குரியது. 4 இருடிகளைக் கடவுளென்றல் : சிலப். 11:5. சீவக. 96, 1124 ; பெருங். 2. 11:150, 4. 10:153. 5 இச்செய்தியை இறையனாரகப் பொருள் முதற்சூத்திர உரையினாலறியலாகும். 6 ";மறைமுது முதல்வன் பின்னர்" (சிலப். 12) என்பதற்கு, மறைமுது முதல்வன்-மாதேவன் ; இவன் பின்னர் அகத்
|