344

தம்பியென்றல் சாலாமையானும், 1அப்பொருடருங்காலத்து, முன்னவன் பின்னவன், முன்னோன் பின்னோனென்றல்லது அச்சொல் நில்லாமையானும் அது பொருந்தாது. "முன்னரே சாநாண் முனிதக்க மூப்புள, பின்னரும் பீடழிக்கு நோயுள" (நாலடி. 92) எனப் பிறாண்டும் முன்னர் பின்னரென்பன இடமுணர்த்தியே நிற்குமென்றுணர்க.

2பொருநனென்றது தான் 3பிறர்க்கு உவமிக்கப்படுவானென்னும் பொருட்டு.

43. விழு சூழிய-சீரிய முகபடாத்தையுடையவாய்,

விளங்கு ஓடைய-விளங்குகின்ற பட்டத்தையுடையவாய்,

44. கடு சினத்த-கடிய சினத்தையுடையவாய்,

44-5. கமழ் கடாத்து அளறு பட்ட நறு சென்னிய-கமழுகின்ற மதத்தாலே சேறுண்டான நறிய தலையினையுடையவாய்,

46. வரை மருளும் உயர் தோன்றல-வரையென்றுமருளும் உயர்ந்த தோற்றத்தினையுடையவாய்,

47. வினை நவின்ற பேர் யானை-போர்த்தொழிலிலே பயின்ற பெரிய யானை, இச்செய்தெனெச்சக்குறிப்பரகிய வினையெச்சமுற்றுக்கள் அடுக்கி வந்தனவற்றை நவின்றவென்னும் பெயரெச்சத்தோடு முடிக்க.

48. சினம் சிறந்து களன் உழக்கவும்-சினமிக்குக் களத்துவீரரைக் கொன்றுதிரியவும்,

49-50. மா எடுத்த மலி குரூஉ துகள் அகல் வானத்து வெயில் கரப்பவும்-குதிரைத்திரள் பகைவர்மேற் செல்லுதலாலுண்டான மிக்க நிறத்தையுடையவாகிய தூளி அகலுதற்குக் காரணமான ஆகாயத்திடத்தே வெயிலைமறைக்கவும்,

51-2. வாம் பரிய கடு திண் தேர் காற்று என்ன கடிது கொட்பவும்-தாவும் குதிரைகளையுடைய செலவுகடிய திண்ணியதேர் காற்றுச் சுற்றியடித்ததென்னக் கடிதாகச் சுழலவும்,


தியனாகிய கடவுள்' என்றெழுதிய அரும்பத உரையாசிரியரது உரை, இங்கே கூறப்படுவனவற்றோடு முரணுதல் காண்க.

1 "பின்னர்-பின்னோன்" (சிலப். 12) என்னும் அடியார்க்கு நல்லாருரையை ஓர்க.

2 ";பொருந-உவமிக்கப்படுவாய்" (முருகு. 276, ந.), "பொருநாகு-ஏனையவற்றிற்கு ஒப்புச் சொல்லப்படும் நாகு" (கலித். 109:4) எனப் பிறாண்டும் இதனை யொத்தே இவ்வுரையாசிரியர் பொருளெழுதுதல் அறிதற்குரியது.

3 "பிறர்க்குநீ வாயி னல்லது நினக்குப், பிறருவம மாகா வொரு பெரு வேந்தே" (பதிற். 73:2-3) ; "பிறர்க்குவமந் தானல்லது, தனக்குவமம் பிறரில்லென" (புறநா. 377:10-11)