345

53-4. [வாண்மிகு மறமைந்தர், தோண்முறையான் வீறுமுற்றவும் :] வாள் மிகு மறம் மைந்தர் தோள் வீறு முறையான் முற்றவும்-வாட்போரான் மிகுகின்ற மறத்தையுடைய வீரருடைய தோள் வெற்றி முறையாக வெட்டுதலான் முற்றுப்பெறவும்,

"விருந்தாயினை யெறிநீயென விரைமார்பகங் கொடுத்தாற், கரும்பூணற வெறிந்தாங்கவ னினதூழினி யெனவே" (சீவக. 2265) என்றார் பிறரும்.

55-6. இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய பொருது அவரை செரு வென்றும்-சேரன்சோழனாகிய இருவராகிய பெரிய அரசருடனே 1குறுநில மன்னரும் இளைக்கும்படி பொருது அவரைப் போரைவென்றும் அமையாமல்,
உம்மை : சிறப்பும்மை.

57-9. [இலங்கருவிய வரைநீந்திச், சுரம்போழ்ந்த விகலாற்ற, லுயர்ந்தோங்கிய விழுச்சிறப்பின் :]

உயர்ந்து இலங்கு அருவிய வரை நீந்தி ஓங்கிய விழு சிறப்பின்-உயர்ந்து விளங்குகின்ற அருவிகளையுடைய மலையிற் குறிஞ்சிநிலமன்னரையெல்லாம் கவன்று உயர்ந்த சீரிய தலைமையினாலே,

இகல் ஆற்றல் சுரம் போழ்ந்த சிறப்பின் - மாறுபாட்டை நடத்துதலையுடைய பகைவர்காடுகளைப் பலவழிகாகப்பிளந்த சிறப்பினாலே,

60. நிலம் தந்த பெரு உதவி-நாட்டிலிருக்கின்ற அரசர் நிலங்களையெல்லாங் கொண்ட பெரிய உதவியையும்,

2மலையும் காடும் அரணாக இருந்த அரசரை அழித்தவலியாலே நாட்டிலிருக்கின்ற அரசர் தத்தம் நாடுகளைவிட்டாரென்றதாம்.

61. பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்-பொன்னாற் செய்த தாரையணிந்த மார்பினையுமுடைய 3வடிம்பலம்பநின்ற பாண்டியன் வழியில் வந்தோனே,


1 குறுநிலமன்னர்-திதியன் முதலாயினோர் ; மதுரைக். 128-9-ஆம் அடிகளின் உரையைப் பார்க்க.

2 ";உண்டாகிய வுயர்மண்ணும், சென்றுபட்ட விழுக்கலனும், பெறல்கூடுமிவ னெஞ்சுறப்பெறின்" (புறநா. 17:24-6) என்பதன் கருத்து இவ்விசேடவுரையுடன் ஒப்புநோக்கற்பாலது.

3 ‘முந்நீர்க்கண் வடிம்பலம் நின்றானென்ற வியப்பால், நெடியோனென்றாரென்ப' (புறநா. 9:10, உரை), "அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி, வடிவே லெறிந்த வான்பகை பொறாது .................... கடல் கொள்ள" (சிலப். 11:17-20), "ஆழி வடிம்பலம்ப நின்றானும்" (நள. சுயம். 137), "கடல்வடிம் பலம்ப நின்ற கைதவன்" (வி. பா. 15-ஆம் போர். 18) என்பனவும், "மன்னர்பிரான் வழுதியர்கோன்