யானை (47) களனுழக்கவும் (48) துகள் (49) வெயில்கரப்பவும் (50) தேர் (51) கொட்பவும் (52) மைந்தர் (53) முற்றவும் (54) பொருது செருவென்றும் அமையாமல் (56) விழுச்சிறப்பின் (59) நிலந்தந்த உதவியினையும் (60) மார்பினையுமுடைய நெடியோன் (61) என்க. 62-3. மரம் தின்னூஉ வரை உதிர்க்கும் நரை உருமின் ஏறு அனையை-மரங்களைச் சுட்டு மலைகளைநீறாக்கும் பெருமையினையுடைய உருமேற்றை ஒப்பை, "கருநரைநல்லேறு" (குறுந். 317:1) என்றார் பிறரும். இன் : அசை. 64. அரு குழு மிளை-பகைவர் சேர்தற்கரிய திரட்சியையுடைய காவற்காட்டினையும், குண்டு கிடங்கின்-ஆழத்தினையுடைய கிடங்கினையும், 65. உயர்ந்து ஓங்கிய நிரை புதவின்-உயர்ந்துவளர்ந்த கோபுரங்களிடத்து வாயில்களையும், நிரை : ஆகுபெயர். உயர்ச்சி ஓங்குதலை விசேடித்துநின்றது. 66. நெடுமதில்-நெடிய மதிலினையும், நிரை ஞாயில்-நிறைந்த சூட்டினையுமுடைய, அஃது எய்தால் மறைதற்கு உயரப்படுப்பது. 67. [அம்புமி ழயிலருப்பம் :] அயில் அம்பு உமிழ் அருப்பம்-கூர்மையையுடைய அம்புகளையுமிழும் அரண்களை, மிளை (64) முதலியவற்றையுடைய அருப்பமென்க. 68-9. தண்டாது தலை சென்று கொண்டு நீங்கிய விழு சிறப்பின்-அமையாமல் அவ்விடங்களிலே சென்று கைக்கொண்டு அவ்விடங்களினின்றும் போன சீரிய தலைமையினையுடைய கொற்றவர் (74), 70-71. [தென்குமரி வடபெருங்கல், குணகுடகட லாவெல்லை :] தென்குமரி எல்லை ஆ வட பெரு கல் எல்லை ஆ குண குட கடல் எல்லை ஆ-தென்றிசைக்குக் குமரி எல்லையாக வடதிசைக்குப் பெரியமேரு எல்லையாகக் கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்கும் கடல் எல்லையாக இடையில் வாழ்வோரெல்லாம்,
வடிம்பலம்ப நின்றருளி" (பராந்தகதேவர்மெய்க்.) என்பதும், இப்பெயராற் பெறப்படும் செய்தியைக் கூறுவதுகாண்க ; "வென்றிபடச் சிவந்தெறியக்கருங்கடல்வெவ் வலிதொலைந்து, முன்றெறுமம் புடைந்து பங்கப்பட்டலறி மோதிவிழா, நின்றபடி வடிம்பலம்ப நின்றதுகண் டேனோரு, மின்றிதுகண் டனம்புதுமை யெனம்பயம்விட் டெழத்துதித்தார்", "மாலைமுடி யோன்வேலை வடிம்பலம்ப நின்றதனால், வேலை வடிம்பலம்பநின்றா னென்றெங்கும் விளங்கியதால்" என்பனவற்றால், இச்சிறப்புப் பெயரையுடையார் உக்கிர குமார பாண்டியரென்று கூறுவார் ; திருவால. 21:6, 7
|