இதனால், தனக்குநடவாததோர் ஊர்கொண்டானென்றார். இன்னை அசையாக்கி நெல்லூரென்பாருமுளர். இருக்கையினையும் (85) கிடங்கினையும் (86) உடைய ஊரென்க. 89-92. [நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர், பாடுசிலம்பு மிசையேற்றத், தோடுவழங்கு மகலாம்பியிற், கயனகைய வயனிறைக்கும் :] வயல் அகைய நிறைக்கும் கயன் நீர் (92) 1தெவ்வும் நிரை 2தாழுவர் (89) பாடு சிலம்பும் இசை (90)-வயல் தழைக்கும்படி நீரை நிறைத்தற்குக்காரணமான குளங்களில் நீரை 3இடாவான் முகந்துகொள்ளும் நிரையாகநின்று தொழில்செய்வாரிடத்தே ஒலிக்குமோசை, ஏற்றத் (90) தோடு வழங்கும் அகல் ஆம்பியின் (91) இசை (90) -ஏற்றத்துடனே உலாவும் அகன்ற பன்றிப்பத்தரின் ஓசை, 93. மெல் தொடை வல் கிழாஅர் இசை (95)-மெத்தென்ற கட்டுக்களையுடைய வலிய 4பூட்டைப்பொறியினோசை. 94. அதரி கொள்பவர் இசை (95)-கடாவிடுகின்றவர் ஓசை, பகடு பூண் தெள் மணி இசை (95)-எருதுகள் பூண்ட தெள்ளிய மணியின் ஓசை, 95. இரு புள் ஒப்பும் இசையே-பயிர்களிற் பெரிய கிளி முதலியவற்றை ஓட்டும் ஓசை, ஏகாரம் : ஈற்றசை. என்றும்-எந்நாளும், 96-7. மணி பூ முண்டகத்து மணல் மலி கானல் பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப-நீலமணிபோலும் பூக்களையுடையவாகிய கழிமுள்ளிகளையுடைய மணற்குன்றுகள் மிக்க கடற்கரையிலிருக்கும் பரத
1 ‘தெவ்வு' என்றபாடமே நேரானது : "எடுத்தல் படுத்தல்" (பிரயோக. 40) என்பதன் உரையைப் பார்க்க; "சோணாடுதெவ்வுதலும்" என்றார், ஸ்ரீகச்சியப்பமுனிவரும் ; காஞ்சி. நகரேற்று. 142. 2 தொழில் செய்வாரென்னும் பொருளில் தொழுவரென்பது (மதுரைக். 122) என்புழியும், "நெல்லரியு மிருந்தொழுவர்" "நெல்லரி தொழுவர்" (புறநா. 24:1, 209:2) என்புழியும் வந்துள்ளது. 3 இடா-இறைகூடை ; "பேரிடாக் கொள்ளமுன் கவித்து" (பெரிய. இளையான்குடி. 17) 4 "காலை யங்கதிற் பூட்டையங் கடமதொன் றமிழ, மேலெ ழுந்து செல் கின்றதோர் கடமென மேலை,வேலை வெங்கதி ரமிழ்ந்துற முழுமதி விண்ணின், பாலெ ழுந்தது விரிகதி ருலகெலாம் பரப்பி" (சீகாளத்தி. கன்னியர். 119) என்பதனால், பூட்டைப்பொறியினியல்பை அறிந்து கொள்க. இது காஞ்சீபுரத்தின் பக்கத்திலுள்ள ஊர்களிற் பெரும்பாலும் காணப்படும்.
|