35

1 - திருமுருகாற்றுப்படை

உருள்பூ உவமத் தொகையாகலின் உருள்பூ உருட்பூவென உறழ்ச்சி முடிபெய்தும்; இனி உருண்டபூ உருளும்பூவென வினைத்தொகையுமாம்.மழை சிதறித் தலைஇய கானத்து மராஅத்துத் தார் புரளும் மார்பினனென முடிக்க.

இது 1போகத்திற்குரிய தார்; இதனை முற்கூறினார், வாணுதல் கணவன் (6) என்றதனை நோக்கி.

12. மால்வரை என்பதுமுதற் சென்னியன் (44) என்னுந்துணையும் ஒரு தொடர். 

மால் வரை நிவந்த சேண் உயர்வெற்பில் - பெருமையையுடைய மூங்கில் வளர்ந்த தேவருலகளாவாகச் செல்லவுயர்ந்த மலையில், 2வரை களையுடைமையின் வரையாயிற்று; இஃது ஆகுபெயர்;3"பெரிய வரைவயிரங் கொண்டு" என்றார் பிறரும்; இனித் திருமால் போலும் குவடுகளோங்கிய வெற்பென்றுமாம்; "மாயோ னன்ன மால்வரைக் கவாஅன்" (நற். 32 : 1) என்றார் பிறரும்.

13. கிண்கிணி 4கவைஇய ஒள் செஞ்சீறடி - சிறு சதங்கை சூழ்ந்த ஒள்ளியதாகிய சிவந்த சிறிய அடியினையும். 

14. கணை கால் - திரண்ட காலினையும், 

வாங்கிய நுசுப்பின் - வளைந்து நுடங்கிய இடையினையும், 

பணை தோள் - பெருமையையுடைய தோளினையும், 

மூங்கில்போலும் தோளென்றுமாம். 

15. கோபத்து அன்ன தோயா 5பூ துகில் - இந்திர கோபத்தை யொத்த நிறம்பிடியாத இயல்பான சிவப்பாகிய பூத்தொழிலினையுடைய துகிலினையும், 

1"மாலைமார்ப" என்றதில் மாலையென்பது இன்பத்திற்குரிய மாலையென்பர்; முருகு. 261,

2"வரை, கண்களை யுடைமையான் ஆகுபெயரான் மூங்கிற்குப் பெயராயிற்று, வரை மலையாகாதோவெனின் .......... ‘ மால் ............... வெற்பில்' எனக் கூறியதனான் உணர்க" (தஞ்சை. 49, உரை)

3"அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே, பெரிய வரைவயிரங் கொண்டு - தெரியிற், கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார், பெரிய வரைவயிரங் கொண்டு" (யா. வி. சூ. 60 மேற்.)

4கவைஇய - கட்டிய (வேறுரை)

5இவ்வாறே பூங்கலிங்கமென்பதற்குப் பூத்தொழிலையுடைய கலிங்கமென்று பொருளெழுதுவர் (கலித். 56 : 11,.) பூத்தொழிலையுடைய துகில்: சிலப். 14 : 86 - 97, அடியார். "சித்திரப்படாம்" சிலப். 7 : 1.