231. பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை - உயரப்பறக்கும் பருந்துகளும் பறத்தலாற்றாத உயர்ச்சியையுடைய அரண்களையுடைய பாசறைக்கண்ணே, 1பார்வல் : ஆகுபெயர். 232. படு கண் முரசம் காலை இயம்ப-ஒலிக்கின்ற கண்ணையுடைய பள்ளியெழச்சி முரசம் நாட்காலத்தே ஒலிப்ப இருந்து, 233. வெடி பட கடந்து-பகைவர் படைக்குக் கேடுண்டாக வென்று, வெடி-ஓசையுமாம், வேண்டு புலத்து இறுத்த-பின்னும் அழிக்கவேண்டுமென்ற நிலங்களிலே சென்று விட்ட, 234. பணை கெழு பெரு திறல் பல் வேல் மன்னர்-வெற்றிமுரசு பொருந்தின பெரிய வலியினையும் பலவேற்படையினையுமுடைய அரசர்கள், 235-6. [கரைபொரு திரங்குங் கனையிரு முந்நீர்த், திரையிடு மணலினும் பலரே :] கனை இரு முந்நீர் கரை பொருது இரங்கும் திரை இடு மணலினும் பலரே-செறிதலையுடைய கரிய கடலிற் கரையைப் பொருது ஒலிக்கும் திரைகுவிக்கின்ற மணலினும் பலரே, ஏகாரம் : பிரிநிலை. 236-7. உரை செல மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே-புகழ் எங்கும் பரக்கும்படி அகன்ற இடத்தையுடைய உலகங்களைத் தமது ஏவல்களை நடத்தி மக்கட்குரிய மனனுணர்வின்மையிற் பிறப்பறமுயலாது பயனின்றி மாண்டோர் ; ஏகாரம் : ஈற்றசை. "மக்க டாமே யாறறி வுயிரே" (தொல். மரபு. சூ. 33) என்றதனால், மனனுணர்வின்மையினென்றாம். தரீஇக் (219) கடைஇச் (220) சிதறிப் (224) பணிந்தோர் தேஎம் தம்வழி நடக்கையினாலே (229) பணியார்தேஎம் பணித்துத் திறை கொள்ளுதற்குப் (230) பெரியோர் சுற்றமாகக்கொண்டு (227) பாசறையிலே (231) முரசியம்ப இருந்து (232) கடந்து இறுத்த (233) மன்னர் (234) உலகமாண்டு கழிந்தோர் (237) திரையிடு மணலினும்பலர் (236) என முடிக்க. இது, "மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை" (தொல். புறத். சூ. 24) அன்றிப் பிறவியற முயலாமையிற் கழிந்தமை கூறிற்று. 238. அதனால்-பயனின்மையாலே,
1 பார்வல்-அரசர், தம் பகைவர் சேய்மைக்கண் வருதலைப் பார்த்திருத்தற்குரிய உயர்ச்சியையுடைய அரண்.
|