372

தந்ததென்றும் பாடம்.

318. [இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்பு :]

இரு கழி செறுவின் வெள் உப்பு-கரிய கழியிடத்துப் பாத்தியில் விளைந்த வெள்ளிய உப்பு,
தீ புளி-கருப்புக்கட்டி (கரும்பின் வெல்லக்கட்டி) கூட்டிப் பொரித்த புளி,

319. பரந்து ஓங்கு வரைப்பின்-மணற்குன்று பரந்துயருங் கானலிடத்தே,

319-20. வல் கை திமிலர் 1கொழு மீன் குறைஇய துடி கண் துணியல்-வலிய கையினையுடைய திமிலர் கொழுவிய மீன்களையறுத்த துடியின் கண்போலுருண்ட துணிகள்,

என்றது கருவாடுகளை.

தீம்புளியினையும், உப்பினையும், கருவாட்டினையுமேற்றின நாவா (321) யென்க.

321. விழுமிய நாவாய்-சீரிய மரக்கலம

பெருநீர் ஓச்சுநர்-மரக்கல மீகாமர்,

322. நன தலை தேஎத்து-அகன்ற இடத்தையுடைய யவனம் முதலிய தேயத்தினின்றும்

நல் கலன் உய்ம்மார்-இவ்விடத்துண்டாகிய பேரணிகலங்களை ஆண்டுச் செலுத்துதற்கு,

323. புணர்ந்து-பலருங்கூடி,

உடன் கொணர்ந்த புரவியொடு-சேரக்கொண்டுவந்த குதிரைகளோடே,

அனைத்தும்-முழுவதும்,

324. வைகல் தோறும் வழி வழி சிறப்ப-நாடோறும் முறைமையே முறைமையே மிகுகையினாலே வளம்பல பயின்று (325) என்க.

325. நெய்தல் சான்ற-இரங்கலாகிய உரிப்பொருளமைந்த,

வளம் பல பயின்று-பல செல்வமும் நெருங்கப்பட்டு,

ஒருசார் (314), பெருநீரோச்சுநர் (321) கலனுய்ம்மார் தேஎத்துக் (322) கொணர்ந்த புரவியோடே (323) முத்தம் (315) வளை (316) கூல


1 "கொழுமீனுண்ட வன்னங்களே" (திருச்சிற். 188) என்பதன் உரையில், ‘கொழுமீனென்பது ஒருசாதி' (பேர்.) என எழுதியிருத்தலால் இப்பெயரமைந்த ஒருவகை மீன் உண்மை பெறப்படுகின்றது ; "கொழுமீன் குறைய வொதுங்கி" (சிறுபாண். 41) ; "நெய்த்தலைக் கொழுமீன்" "கொழுமீன் சுடுபுகை" (நற். 291:2. 311:6) ; "நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்" (பெரிய. திருக். குறிப்புத். 35)