374

கலை தாய (332) மலி பொங்கர் (333) மந்தி ஆட (334) மரம் பயில் கா-(335) முசுக்கலைகள் தாவின் மிக்ககொம்புகளிலே அவற்றின் மந்திகள் விளையாடும்படி மரம் நெருங்கினசோலை,

மா விசும்பு உகந்து (334) -பெரிய ஆகாயத்தே செல்ல உயர்கையினாலே,

முழங்குகால் பொருந, மரம் (335)-முழங்குகின்ற பெருங்காற்றடித்த மரம்,

மயில் அகவும் (333) காவின் (335)-மயில் ஆரவாரிக்குங் காவோடே,

உயர் சிமையத்து (332) இயங்கு புனல் கொழித்த வெள் தலை குவவு மணல் (336) கான் பொழில் (337)-உயர்ந்த மலையுச்சியிடத்து நின்றும் வீழ்ந்தோடுகின்ற நீர் கொழித்து ஏறட்ட வெள்ளிய தலையினையுடைத்தாகிய திரட்சியையுடைய மணற்குன்றிடத்து மணத்தையுடைய பொழில்,

337. தழீஇய அடை கரை தோறும்-காவோடே (335) பொழில் (336) சூழ்ந்த நீரடையும் கரைகள்தோறும்,

338-42. [தாதுசூழ், கோங்கின் பூமலர் தாஅய்க், கோதையினொழுகும் 1விரிநீர் நல்வர, லவிரறல் வையைத் துறைதுறை தோறும், பல்வேறு 2பூத்திரட் டண்டலை சுற்றி, யழுந்துட் டிருந்த பெரும்பாணிருக்கையும் :]

தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் (338) கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல் (339) வையை (340) தாதுக்கள் சூழ்ந்த கோங்கினுடைய பூவும் ஏனைமலர்களும் பரந்து மாலையொழுகினாற்போல ஓடும் பெருநீர் நன்றாகி வருதலையுடைய வையையிடத்து,

அவிர் அறல் துறை துறை தோறும் (340) பல் வேறு பூ திரள் தண்டலை சுற்றி (341) அழுந்து பட்டு இருந்த 3பெரும்பாண் இருக்கையும் (342)-விளங்குகின்ற அறலையுடைய துறைகடோறும் துறைகடோறும் பலவாய் வேறுபட்ட பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள் சூழப்பட்டு நெடுங்காலம் அடிப்பட்டிருந்த பெரியபாண்சாதியின் குடியிருப்பினையும்,

343-5. நிலனும் வளனும் கண்டு அமைகல்லா விளங்கு பெருதிருவின் மானவிறல்வேள் அழும்பில் அன்ன நாடு இழந்தனரும்-நிலத்தையும் அதிற் பயிர்களையும் 4பார்த்தபார்வை மாறுதலமையாத


1 (பி-ம்.) ‘விரிநீ ரவிரற னல்வரல் வையை'

2 (பி-ம்.) ‘பூவின்றண்டலை'

3 பெரும்பாணச்சாதியினிலக்கணத்தை இப்புத்தகம் 179-ஆம் பக்கத்தின் தொடக்கத்திற் காண்க.

4 "கண்வாங் கிருஞ்சிலம்பின்-பார்த்தவர்கள் கண்ணைத்தன்