விளங்கும் பெரிய செல்வத்தினையுடைய மானவிறல்வேளென்னும் குறுநில மன்னனுடைய அழும்பிலென்னும் ஊரையொத்த நாடுகளை யிழந்தவர்களும், 346. கொழு பல் பதிய குடி இழந்தனரும்-செல்வத்தினையுடைய பல ஊர்களிடத்தனவாகி குடிகளையிழந்தவர்களும், 347. தொன்று கறுத்து உறையும் துப்பு தர வந்த-பழையதாய 1செற்றங்கொண்டு தங்கும்வலி தம்மைக் கொண்டுவருகையினாலே எதிராய்வந்த, 348. அண்ணல் யானை அடுபோர் வேந்தர் - தலைமையினையுடைய யானையினையும் பகைவரைக் கொல்லும் போர்த்தொழிலையுமுடைய வேந்தரை, பல் மாறு ஓட்டி (350)-பலவாய் நெஞ்சிற்கிடந்த மாறுபாடுகளை முதற்போக்கிப் பின்னர், 349-50. [இன்னிசை முரச மிடைப்புலத் தொழியப், பன்மாறோட்டிப் பெயர்புறம் பெற்று :] இன் இசை முரசம் இடைபுலத்து ஒழிய பெயர் புறம் பெற்று-இனி ஓசையினையுடைய முரசம் 2உழிஞைப்போர்க்கு இடையே கிடக்கும்படி மீளுகையினாலுண்டான முதுகைப்பெற்று, என்றது, உழிஞைப்போர் செய்யவந்த அரசர் 3குடுமிகொண்ட மண்ணுமங்கலமெய்தாது இடையே மீளும்படி காத்தகிடங்கு (351) என்றவாறு. 351. 4்உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின்- 5மண்ணுள்ள வளவுமாழ்ந்த நீலமணிபோலும் நீரையுடைய கிடங்கினையும், 352. விண் உற ஓங்கிய பல் படை புரிசை-தேவருலகிலே செல்லும்படி உயர்ந்த பல கற்படைகளையுடைய மதிலினையும், 353. தொல் வலி நிலைஇய வாயில் (356)-பழையதாகிய வலி நிலை பெற்ற வாயில், அணங்கு உடைநெடு நிலை-தெய்வத்தையுடைத்தாகிய நெடிய நிலையினையும்,
னிடத்தே வாங்கிக்கொள்ளுங் கரிய மலையிடத்து" (கலித். 39:15, ந,) என்னும் பகுதி இதனுடன் ஒப்புநோக்கற்பாலது. 1 செற்றம்-பகைமை நெடுங்காலம் நிகழ்வது ; முருகு. 132, உரை. 2 உழிஞைப் போரென்றது இங்கே புறத்துழிஞைப்போரை ; தொல். புறத்திணை. சூ. 10. 3 தொல். புறத்திணை. சூ. 13, பார்க்க ; மதுரைக். 149-ஆம்அடியின் உரையைப் பார்க்க. 4 (பி-ம்.) ‘மண்ணுறவீழ்ந்த' 5 "நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி" (புறநா. 21:2)
|