யுடைய மாக்கள் திரளிடத்து ஓசைமிக்கொலிக்கும்படி இருத்தர (406) என்க. 361-2. மா கால் எத்த முந்நீர் போல முழங்கு இசை நல் பணை அறைவனர் நுவல-பெருமையையுடைய காற்றெடுத் கடலொலிபோல முழங்கும் ஓசையையுடைய நன்றாகிய முரசைச் சாற்றினராய் விழவினை நாட்டிலுள்ளார்க்குச் சொல்லுகையினாலே நாடார்த்தன்றே (428) என்க. ‘அறைவன நுவல' என்று பாடமாயின், அறையப்படுவனவாய் விழாவைச் சொல்லவென்க. 363-4. கயம் குடைந்தன்ன இயம் தொட்டு இமிழ் இசை மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை-கயத்தைக் கையாற்குடைந்து விளையாடுந் தன்மையவாக வாச்சியங்களைச் சாற்றலான் முழங்கின ஓசையைக் கேட்டு மகிழ்ந்தவர்களாடுஞ் செருக்கினைக்கொண்ட ஆரவாரத்தினையு முடைய தெரு (359) என்க. 366. 1ஓவு கண்டன்ன இரு பெரு நியமத்து-சித்திரத்தைக் கண்டாற்போன்ற கட்கு இனிமையையுடைய இரண்டாகிய பெரிய அங்காடித்தெருவில், நாளங்காடி, 2அல்லங்காடியாகிய இரண்டு கூற்றையுடைத்தென்றார். 366. சாறு அயர்ந்து எடுத்த உருவம் பல் கொடி-கோயில்களுக்கு விழாக்களை நடத்திக் கட்டின அழகினையுடைய பல கொடிகளும், இதனால் அறங் கூறினார். 367-8. வேறு பல் பெயர ஆர் எயில் கொள கொள நாள் தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி-வேறுபட்ட பல பெயர்களையுடையவாகிய அழித்தற்கரிய அரண்களைத் தண்டத்தலைவர் அரசனேவலாற் சென்று கைக்கொள்ளக் கைக்கொள்ள அவர்கள் அவ்வெற்றிக்கு நாடோறுமெடுத்த நன்மையைப்பெற்ற சயக்கொடியும், இதனாற் 3புறத்துழிஞைப்போர் கூறினார். 369-71. நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானையொடு புலவு பட கொன்று மிடை தோல் ஒட்டி புகழ் செய்து எடுத்த விறல் சால் நல் கொடி-கடலொலித்தாற்போன்ற நிலைபெறுதலையுடைய வேற்படையோடே சென்று பகைவரைப் புலனாற்றமுண்டாகக்கொன்று பின்னர்
1 ஓவு - ஓவியம் ; "ஓவுக்கண் டன்னவில்" (நற். 268:4), "ஓவுறழ் நெடுஞ்சுவர்" (பதிற். 68:17) 2 அல்லங்காடி-மாலைக்கடை ; மதுரைக். 544. 3 புறத்துழிஞைப்போர்-வேற்றுவேந்தருடைய மதிலின்புறத்தைச் சூழ்ந்து செய்யும்போர்.
|