377-8. [காய்ந்துடன், கடுங்காற் றெடுப்ப :] கடு காற்று உடன் காய்ந்து எடுப்ப-கடியகாற்று நாற்றிசையினும் சேரக்கோபித்தெடுக்கையினாலே, 378. கல் பொறாது உரைஇ-நங்குரக்கல் கயிற்றுடனே நின்று பொருது உலாவி, 379. நெடு சுழி பட்ட நாவாய் போல-நெடியசுழியிம் அகப்பட்டுச் சுழலாநின்ற மரக்கலத்தையொக்க, 380. இருதலை பணிலம் ஆர்ப்ப-முன்னும்பின்னுஞ் சங்கொலிப்ப, யானைமீண்டாற் பின்னின்றவன் ஊதுதற்குப் பின்னுஞ் சங்கு செல்லும். 380-81. சினம் சிறந்து 1கோலோர் கொன்று மேலோர் வீசி-சினம்மிக்குப் பரிக்கோற் காரரைக்கொன்று பாகரைவீசிப் போகட்டு, 382. மெல் பிணி வல் தொடர் பேணாது காழ் சாய்த்து-மெல்லிய பிணிப்பினையுடைய வலிய நீர்வாரியென்று காலிற்கட்டுஞ் சங்கிலியை நமக்குக் காவலென்று பேணாதே அதுகட்டின தறியைமுறித்து. 383. கந்து நீத்து உழிதரும் கடாம் யானையும்-கம்பத்தைக் கைவிட்டுச்சுழலும் கடாத்தையுடைய யானையும், சிறந்து (380) கொன்று வீசிச் (381) சாய்த்து (382) நீத்து (383) ஆர்ப்ப (380) உழிதருங்கடாமெனக் கடாத்தின்றொழிலாகவுரைக்க. காற்றிற்குக் கடாம் உவமிக்கப்படும்பொருள். 384. அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து-அழகிய இடங்களைத் தன்னிடத்தேயுடைய பெரிய ஆகாயம் மறையக் காற்றைப் பிளந்து, தேவருலகம் முதலியவற்றைத் தன்னிடத்தேயுடைமையின் அங்கண்மால் விசும்பென்றார். 385-6. ஒள் கதிர் ஞாயிறு ஊறு அளவா திரிதரும் செ கால் அன்னத்து சேவல் அன்ன-ஒள்ளிய கிரணங்களையுடைய ஞாயிற்றைத் தாம் சேர்தலை நெஞ்சாலே கருதிக்கொண்டு பறக்குஞ் சிவந்தகாலையுடைய அன்னத்தினது சேவலையொத்த. 387-8. குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து கால் என கடுக்கும் கவின் பெறு தேரும்-நிறவிய பலமயிர்களையுடைய குதிரைகளோடுதலிற் செலவுமிக்குக் காற்றெனக் கடுக ஒடும் அழகினைப்பெறுகின்ற தேரும்,
1 (பி-ம்.) ‘காலோர்'
|