389. கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்-கையிலேயெடுத்த மத்திகையையுடைய 1வாசிவாரியன் 2ஐந்துகதியையும் பதினெட்டுச் சாரியையும் பயிற்றுகையினாலே, 390. அடி படு மண்டிலத்து ஆதி போகிய-குரங்களழுந்தின வட்டமான இடத்திலும் 3ஆதியென்னுங் கதியிலும் ஓடின, 391. கொடி படு சுவல 4இடு மயிர் புரவியும்-ஒழுங்குபடும் 5கேசாரியையுடையனவாக இட்டவாசங்களையுடைய குதிரைகளும், 392-3. [வேழத் தன்ன வெருவரு செலவிற், கள்ளார் களம ரிருஞ்செரு மயக்கமும் :] வெருவரு வேழத்து அன்ன செலவின் கள்
1 வாசிவாரியன்-குதிரையைத் தன்வயப்படுத்தி நடத்துவோன் ; "வாய்ந்தமா வுகைத்த வாசி வாரியப் பெருமானெங்கே" (திருவால. 29:17) ; "தாமென்றது, இவற்றின் மேலேறின வாசிவாரியர்களை" (தக்க. 263, உரை) 2 "ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும்" (பு. வெ. 355-6); "இசைத்தவைங் கதியுஞ் சாரி யொன்பதிற் றிரட்டி யாதி, விசித்திர விகற்பும்" (திருவிளை. 59:77): "அரிதரி தெனவி யப்ப வைந்து தாரையினுந் தூண்டி" (திருவால. 39:35); "சதியைந்துமுடைத்திக் குதிரை" (தொல். கிளவி. சூ. 33, சே. ந. மேற்.) ; "சுற்று நீளமு முயரமு நிகர்ப்பன சழியின்மிக்கன தீமை, யற்று மேதகு நிறத்தன கவினுடைய யவயவத்தன வாகி, யெற்று மாமணி முரசமுஞ் சங்கமு மெனுங்குரல் மிகுத்திப்பார், முற்று மாதிரத் தளவுமைங் கதியினான் முடிப்பன விமைப்போதில்", "யாளி குஞ்சரம் வானர முதலிய வியக்கினால் விசும்பெங்கும், தூளி கொண்டிட மிடைந்துவந்தன நெடுந்துர கதம்பல கோடி" (வி. பா. சூதுபோர். 81-2); விக்கிதம், வற்கிதம், உபகண்டம், ஜவம், மாஜவமென்னுமிப் பஞ்சதாரையையு மென்பர் பு. வெ. உரையசிரியர். 3 ஆதி-நெடுஞ்செலவு : ஆதிமாதி யென்பவற்றுள் ஆதிநெடுஞ்செலவென்பர் (கலித். 96:20) இவ்வுரையாசிரியர். "ஆதிவரு கதிப்பரியும்" (வி. பா. இராசசூயச். 131) 4 "ஓங்கன் மதிலு ளொருதனிமா-ஞாங்கர், மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றா, ருயிருணிய வோடி வரும்" (பு. வெ. 90) என்பதும், ‘மலைபோன்ற புரிசையிடத்து ஒப்பில்லாததொரு குதிரை பக்கத்தே கவரியிட எழுந்து மேகத்தை யொத்துப் பகைவருயிரை யுண்பான் வேண்டிக் கடுகி வரும்' என்னுமதனுரையும், "முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டு, மூட்டுறு கவரி தூக்கி யன்ன" (அகநா. 156:1-2) என்பதும் இங்கே அறியற்பாலன. 5 "பலவாகிய கேசாரியையுடைய குதிரைகள்" (நெடுநல். 93, ந.) இப்பெயர் கேதாரியெனவும் வழங்கும் ; கலித். 96:8, ந.
|