வணங்கு இறை பணை தோள் வயக்குறு வந்திகை-வளைந்த சந்தினையுடைய மூங்கில் போலும் தோளினையும் விளக்கமுற்றிய 1கைவந்தியினையும், தொய்யில் பொறித்த சோர்ந்து உகுவன்ன சுணங்கு எதிர் இளமுலை-தொய்யிலால் வல்லியாக எழுதின நெகிழ்ந்து சிந்துமாறுபோன்ற சுணங்குதோற்றிய இளைய முலையினையும். 2தொய்யில்-எழுதுங்குழம்பு. 417. மை உக்கன்ன 3மொய் இரு கூந்தல்-மையொழுகினாற் போன்ற செறிந்த கரியமயிரினையுமுடைய, 418. மயில் இயலோரும் மடமொழியோரும்-மயிலின் தன்மையையுடையோரும் மடப்பத்தையுடைய வார்த்தையினையுடையோரும், 419. 4கைஇ மெல்லிதின் ஒதுங்கி கையெறிந்து-தம்மைக் கோலஞ்செய்து மெத்தெனநடந்து கையைத் தட்டி, 420. கல்லா மாந்தரொடு நகுவனர். திளைப்ப-5காமநுகர்ச்சியினையன்றி வேறொன்றையுங்கல்லாத இளையோருடனே மகிழ்ந்தனராய்ப் புணரும்படி, 421. [புடையமை பொலிந்த 6வகையமை செப்பில்:] புடைஅமை செப்பில்-புடைபடுதலமைந்த செப்பிடத்தில், பொலிந்த வகை அமை செப்பில்-பொலிவுபெற்ற கூறுபாடமைந்த செப்பிடத்திற் பண்ணியம் (422) என்க. 422. 7காமரு உருவின் தாம் வேண்டும் பண்ணியம்-விருப்பமருவிய வடிவினையுடைய நுகர்வார் தாம் விரும்பும் நுகர்பொருள்களை, 423. கமழ் நறு பூவொடு மனை மனை மறுக-மிகவுநாறும் நறிய பூவுடனேயேந்தி 8மனைகடோறும் உலாவிநிற்க, நலத்தராய்ச் (409) செய்யராய் நோக்கினராய் (412) மாமையராய் (413) வாயராய்த் தோளினையும் (414) வந்திகையினையும் (415) முலையினையும் (416) கூந்தலினையுமுடைய (417) மயிலியலோரும் மடமொழி
1 வைந்தி-கையில் தோளின்கீழ் அணியப்படும் ஆபரணம்; இப்பெயர் வழக்கிலுமுள்ளது. 2 "தொய்யில்-பத்திக்கீற்றென்பர்" (சிலப். 2:69-70, அடியார்.) 3 (பி-ம்.) ‘ஐம்பாற் கூந்தல்' 4 (பி-ம்.) ‘தைஇ' 5 பொருந. 100, சிறுபாண். 33, முல்லை. 36 என்பவற்றிலுள்ள, ‘கல்லா' என்பதற்கு இங்கே கூறுயதுபோலவே உரை கூறுதல் அறியற்பாலது. 6 (பி-ம்.) ‘மடையமை செப்பிற் காமவுருவிற்' 7 முருகு. 75, குறிப்புரையைப் பார்க்க. 8 (பி-ம்) ‘மனைகடோறு மனைகடோறும்'
|