385

யோரும் (418) கைஇ ஒதுங்கி எறிந்து (419) மாந்தரொடு திளைக்கும் படி (420) தொன்முதுபெண்டிர் (409) பண்ணியத்தைப் (422) பூவோடே ஏந்தி மனைமனைமறுக (423) எனக்கூட்டுக.

424-5. மழை கொள குறையாது புனல் புக 1மிகாது கரைபொருது இரங்கும் முந்நீர் போல-மேகம் முகக்கக் குறைவுபடாமல் யாறுகள் பாய்தலின் மிகுதலைச் செய்யாமற் கரையைப் பொருது ஒலிக்குங் கடல்போல,

426. கொள கொள குறையாது தர தர மிகாது-பலரும்வந்து கொள்ளக்கொள்ளக் குறையாமற் பலரும் மேன்மேலுங் கொண்டுவரக் கொண்டுவர மிகாமல்,

427-8. [கழநீர் கொண்ட வெழுநா ளந்தி, யாடுதுவன்று விழவினாடார்த் தன்றே :]

கழநீர் கொண்ட அந்தி-தீவினையைக் கழுவுதற்குக்காரணமான தீர்த்தநீரைத் தன்னிடத்தேகொண்ட அந்திக்காலம்,

ஆடு துவன்று விழவின் எழுநாள் அந்தி-வேறோரிடத்தில்லாத வெற்றி நெருங்குந் திருநாளினைத் தன்னிடத்தேயுடைய ஏழாநாளந்தியில்,

2கால்கொள்ளத்தொடங்கிய 3ஏழாநாளந்தியிலே தீர்த்தமாடுதல் மரபு.

நாடு-அவ்விழவிற்குத்திரண்ட நாட்டிலுள்ளார்,

ஆர்த்தன்றே-ஆர்த்தஆரவாரம்,

அற்றேயென்பது அன்றேயெ மெலிந்ததாக்கி உவமவுருபாக்கலுமொன்று

429. [மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் :] பிறங்கிய மாடம் மலிபுகழ் கூடல்-பெரிய 4நான்மாடத்தாலே மலிந்தபுகழைக் கூடுதலையுடைய மதுரை (699) என மேலேகூட்டுக.


1 (பி-ம்.) ‘நிறையாது'

2 "கால்கோள் விழவு" (சிலப். 5:144)

3 ஏழுநாளிற் செய்யப்பெறுந் திருவிழா, ‘பவுநம்' எனப்படும் ; திருப்பெருந்துறைப்புராணம், புரூரவன் திருவிழாச்செய்த படலம், 50-ஆம் பாடலைப் பார்க்க ; "ஆத்தமா மயனு மாலு மன்றிமற் றொழிந்த தேவர், சோத்தமெம் பெருமா னென்று தொழுதுதோத் திரங்கள் சொல்லத், தீர்த்தமா மட்ட மீமுன் சீருடை யேழு நாளும், கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே" (திருக்குறுக்கை. திருநா. தே.) என்பதும் ஈண்டு ஆராயத்தக்கது.

4 "நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும் (கலித். 92:65) என்பதும், ‘நான்குமாடம் கூடலின் நான்மாடக்கூடலென்றாயிற்று;