மணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதை, அணிகிளர் மார்பி னாரமொடளைஇக், காலியக் கன்ன கதழ்பரி கடைஇ :] புரளும் தானை (435)-தோளிலே கிடந்தசையும் 1ஒலியலினையும், கச்சம் தின்ற கழல் தயங்கு 2திருந்து அடி (436)-கோத்துக் கட்டிய கச்சுக்கிடந்து தழும்பிருந்த வீரக்கழலசையும் 3பிறக்கிடாத அடியினையும், மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரு தெரியல் (437)- உலகத்துள்ளார் வலிகளைக்கடந்து புகழ்ச்சியால் எங்குந்திரியும் ஒன்றாகிய பெரிய வேப்பமாலையினையும், அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ (439) மணி தொடர்ந்தன்ன ஒள் பூ கோதை (438)-அழகு விளங்கும் மார்பிற்கிடக்கின்ற ஆரத்தோடேகலந்து மாணிக்கம் ஒழுகினாலொத்த ஒள்ளிய செங்கழுநீர் மாலையினையுமுடையராய், பிரம்பின் திண் தேர் (435) கால் இயக்கன்ன கதழ் பரி கடைஇ (440)-விளிம்பிலே வைத்த பிரம்பினையுடைய திண்ணிய தேரிற்பூண்ட காற்றினுடைய செலவினையொத்த விரைந்த குதிரைகளைச் செலுத்தி, 441. காலோர் காப்ப கால் என கழியும்-காலாட்கள் சூழ்ந்து காப்பக் காற்றென்னும்படி கடிதிற்செல்லும், 442-3. [வான வண்கை வளங்கெழு செல்வர், நாண்மகி ழிருக்கை :] நாள் மகிழ் இருக்கை வானம் வள் கை வளம் கெழு செல்வர்- 4நாட்காலத்து மகிழ்ந்திருக்கின்ற இருப்பிலே மேகம்போலே வரையாமற் கொடுக்கும் வளவிய கையினையுடையராகிய வளப்பம் பொருந்தின செல்வர், தானை (435) முதலியவற்றையுடையராய்க் கட்டிக் (434) கடைஇக் (440) கழியும் (441) செல்வரென்க. 443-4. காண்மார் பூணொடு தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப-விழாவைக் காண்டற்குப் பூண்களோடே தெள்ளிய உள்ளின் மணிகளை
1 ஒலியல்-இங்கே மேலாடை ; "உடையு மொலியலுஞ் செய்யை" (பரி. 19:97) 2 "கழலுரீஇய திருந்தடி" (புறநா. 7:2) என்பதன் உரையில் ‘வீரக்கழலுரிஞ்சிய இலக்கணத்தாற் றிருந்திய அடியினையும்" என்றும், ‘திருந்தடி யென்பதற்குப் பிறக்கிடாத அடியெனினும் அமையும்' என்றும் அதன் உரையாசிரியர் எழுதியிருத்தல் இங்கே அறியற்பாலது. 3 பிறக்கு-பின் ; பிருதக்கென்னும் வடமொழிச் சிதைவென்பர்' சிலப். 5:95-8, அடியார். 4 "நாட்கள் ளுண்டு நாண்மாகிழ் மகிழின், யார்க்கு மெளிதே தேரீதல்லே" (புறநா. 123:1-2)
|