யுடைய பொன்னாற்செய்த சிலம்புகளொலிக்கும்படி மேனிலத்துநின்றும் இழிதலால், சிலம்பொலிப்பவென்பதனால் இழிதல்பெற்றாம். 444-6. [ஒள்ளழற், றாவற விளங்கிய வாய்பொ னவிரிழை, யணங்கு 1வீழ் வன்ன பூந்தொடி மகளிர் :] அணங்கு வீழ்வு அன்ன ஒள் அழல்தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை பூ தொடி மகளிர்-வானுறை தெய்வங்களின் வீழ்ச்சியையொத்த ஒள்ளியநெருப்பிலே வலியற விளங்கிய அழகிய பொன்னாற்செய்த விளங்கும் பூண்களையும் பூத்தொழிலையுடைய தொடியினையுமுடைய மகளிர், இவர் 2நாயன்மார் கோயில்களிற் சேவிக்கும் மகளிர். 447. மணம் கமழ் நாற்றம் தெரு உடன் கமழ-புழுகுமுதலியன நாறுகின்ற நாற்றம் தெருவுகளெல்லாம் மணக்க, மணம் : ஆகுபெயர். 448. ஒள் 3குழை திகழும் ஒளி கெழு திருமுகம்-ஒள்ளிய மகரக் குழையை உள்ளடக்கிக் கொண்ட ஒளிபொருந்திய அழகினையுடையமுகம், 449-50. [திண்கா ழேற்ற வியலிரு விலோதம், தெண்கடற் றிரையினி னசைவளி புடைப்ப :] திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம் அசைவளி தெள் கடல் திரையின் புடைப்ப-திண்ணிய கொடித்தண்டுகளிலேற்ற அகத்தினையுடைய பெருங்கொடிகளை அசைகின்ற காற்றுத்தெளிந்த கடற்றிரை போல எழுந்துவிடும்படி அடிக்கையினாலே, 451. நிரை நிலை மாடத்து அரமியம் தோறும்-ஒழுங்குபட்ட நிலைமையினையுடைய மாடங்களின் நிலாமுற்றங்கடோறும், 452. மழை மாய் மதியின் தோன்றுபு மறைய-மஞ்சிலே மறையுந் திங்களைப்போல் ஒருகால் தோன்றி ஒருகால் மறைய, அரமியந்தோறுமிருந்து (451) விழாக்காணும் மகளிர் முகம் (448) விலோதத்தை (449) வளிபுடைக்கையினாலே (450) தோன்றுபுமறைய வென்க. நாயன்மார் எழுந்தருளுங்காற் கொடியெடுத்தல் இயல்பு.
1 (பி-ம்.) ‘வீழ்பன்ன' 2 நாயன்மார்-தெய்வங்கள் ; பண்டைக்காலத்தில் சிவாலயத்தி லெழுந்தருளியுள்ள மூர்த்திகளை நாயன்மாரென்றும் நாயனாரென்றும் வழங்குதல் மரபு. இது சிலாசாஸனங்களால் அறியப்படும் ; "இராஜராஜேச்வரமுடைய நாயனார்" என்பது போல் வருவன காண்க ; "திருக்கோயில் திருவாயில் என்றவற்றிற்கு நாயகராகிய நாயனாரைத் திருநாயனாரென்னாதது போல" திருச்சிற். 1, பேர்.) என்பதும் ஈண்டறியற்பாலது. 3 (பி-ம்.) ‘குழையிருந்த'
|