391

469. விழு சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து-விழுமிய தலைமையோடு பொருந்தின யாகங்கள் முதலிய தொழில்களோடே1சிலகாலம் பொருந்தி,

470. நிலம் அவர் வையத்து-நால்வகைநிலங்களமர்ந்த உலகத்தே

ஒரு தாம் ஆகி-ஒன்றாகிய பிரமம் தாங்களேயாய்,

471. உயர் நிலை உலகம் இவண் நின்று எய்தும்-உயர்ந்த நிலைமையையுடைய தேவருலகத்தை இவ்வுலகிலே நின்றுசேரும்,

472. அறம் நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின்-தருமத்தின் வழி ஒருகாலமுந்தப்பாத பல்லுயிர்கட்கும் அன்புடைத்தாகிய நெஞ்சாலே,

473. பெரியோர் மேஎய்-சீவன்முத்தராயிருப்பாரிடத்தே சில காலம் பொருந்திநின்று,

2இனிதின் உறையும்-ஆண்டுப்பெற்ற வீட்டின்பத்தாலே இனிதாகத் தங்கும் பள்ளி (474),

474. [குன்றுகுயின் றன்ன வந்தணர் பள்ளியும் :]

குன்று குயின்றன்ன பள்ளியும்-மலையை உள்வெளியாகவாங்கி இருப்பிடமாக்கினாற் போன்ற பிரமவித்துக்களிருப்பிடமும்,

3அந்தணர்-வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பார்,

அந்தணர் (474) பாடி (468) அன்புடைநெஞ்சாலே (472) தேவருலகத்தையெய்தும் (471) ஒழுக்கத்தோடே சிலகாலம் நின்று (469) பின்னர் வேதாந்தத்தை யுணர்ந்துபெரியோரை மேஎய் (473)


1 "ஒழுக்கத்து நீத்தார்" (குறள், 21) என்பதன் உரையிற் பரிமேலழகர், ‘தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தார்' என்றும், விசேட உரையில், ‘தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது : தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாதொழுக அறம் வளரும் ; அறம் வளரப் பாவந்தேயும் ; பாவந்தேய அறியாமை நீங்கும் ; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டுணர்வும், அழிதன் மாலையவாய இம்மை மறுமையின்பங்களினுவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும் ; அவை தோன்ற வீட்டின்கண் ஆசையுண்டாம் ; அஃதுண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய யோக முயற்சியுண்டாம்; அஃதுண்டாக மெய்யுணர்வு பிறந்து புறப்பற்றாகிய எனதென்பதும் அகப்பற்றாகிய யானென்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம்முறையே உவர்த்து விடுதலெனக்கொள்க' என்றும் எழுதியவை இங்கே அறிதற்குரியன.

2 (பி-ம்.) ‘இனிதினிது'

3 முருகு. 95, குறிப்புரையைப் பார்க்க.