பத்துப்பாட்டு 10 | திருள்படப் பொதுளிய பராரை மராஅத் துருள்பூந் தண்டார் புரளு மார்பினன் மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய வொண்செஞ் சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோட் | 15 | 15 கோபத் தன்ன தோயாப் பூந்துகிற் பல்காசு நிரைத்த சில்கா ழல்குற் கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி |
10. இருள்படப் பொதுளிய : சிலப். 26 : 108.
"பராரை - பருவரை ; செய்யுள் முடிவு ‘பராரை மராஅத்து' எனவும், வழக்கு முடிவு பருவரை யெனவும் முடியும்" (தக்க. 156, உரை); பராரை, மராத்தென்பன பரியஅரை மராவத்தென்பவற்றின் திரிபுகள் ; இ. கொ. சூ. 125, உரை. 9-10. "தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற் கரும்பீன்று, முளிமுதற் பொதுளிய முட்புறப் பிடவமும்" (கலித். 101: 1-2) 11. மராஅத்துருள் பூ : "உருள்பூங் கடம்பின் பெருவாயில்" (பதிற். 4-ஆம் பத்தின்பதிகம்), "உருளிணர்க் கடம்பி னொலிதாரோயே", "உருளிணர்க் கடம்பி னொன்றுபட கமழ்தார்", "உருளிணர்க் கடம்பினெடுவேட்கு" (பரி. 5: 81; 21 : 11,50), "உருளிணர்க் கடம்பினெடுந்தார்க் கண்ணியன்" (கல்.), "உருள்பசுந் தாரவன்" (காசி. 1. 25 : 10), " உருள்பசுந்தா ரிளங்குமரன்" (காசி. 32 : 1) கார்காலத்திற்குரியது கடம்பென்பதும் அது முருகற்குரியதென்பதும்: "கார்நறுங் கடம்பின் கண்ணிசூடி.... முருகே" (நற்.34:8-11), "கார்நறுங் கடம்பின்.......தெரியற், சூர்நவை முருகன்" (புறநா. 23 :3-4) "கார்க்கடப்பந் தாரெங் கடவுள்" (மணி. 4 : 49) 13. "கிண்கிணி கவைஇய. தெய்வச் சிற்றடிக் கமலப் போது" (பாகவதம், 10. 1 : 46) 15. " வெண்டுகில்' என்றும், ‘கோபத்தன்ன தேயாப்பூந்து கில்' என்றுங் கூறலின், துகில் வெண்மை செம்மை யிரண்டிற்கும் பொது"; " என்றது, அரத்தந் தோயாமல் அரத்த நிறத்தை இயல்பாகக் கொண்ட துகிலாயிற்று; ‘கோபத்தன்ன தோயாப் பூந்துகில்' போல இத்துகிலும் இவர்க்குள்ள தென்றார்" (சீவக. 34, 2685, ந.) "குன்றியேய்க்குமுடுக்கை" (குறுந். 1) 16."பல்காசு நிரைத்த கோடேந் தல்குல்" (அகநா. 75 : 19), "பல்காசு நிரைஇய வல்குல்" (பெருங். 1. 40: 99) 17. வனப்பென்பது பல உறுப்புந்திரண்டவழிப் பெறுவதோர் அழகென்பர்; தொல்.செய். 235, பேர். ந.
|