சரக்கு இறங்குதலைச் செய்யும் பட்டினத்து ஒல்லென முழங்குகின்ற ஓசையையொக்க, மறுகுதற்குவந்த வங்கம் குட்டத்தினின்றும் வருவனவற்றிற் பண்டமிழியும் பட்டினத்து ஓசைமானவென்க. பெயர்தலின் (542) பல் வேறு புள்ளின் இசை எழுந்தற்று (543)1இரையை நிறைய மேய்ந்து பார்ப்பிற்கு இரைகொண்டு அந்திக்காலத்து மீளுதலிற் பலசாதியாய் வேறுபட்ட பறவைகளினோசை எழுந்த தன்மைத்து, அல் அங்காடி 2அழி தரு கம்பலை (544)-அந்திக்காலத்துக் கடையில் மிகுதியைத்தருகின்ற ஓசை, கடவுட்பள்ளியிடத்தும் (467) அந்தணர் பள்ளியிடத்தும் (474) சேக்கையிடத்தும் (487) அவையத்திடத்தும் (492) காவிதிமாக்களிடத்தும் எழுகின்ற வோசை (499) கோதை (524) யிருக்கையில் (525) விழைவுகொள் கம்பலை கடுப்பக் (526) கல்லென (538) எனமுடிக்க. பண்ணியம் பகர்நரிடத்தோசையும் (506) நாற்பெருங்குழுவிடத்தோசையும் (510) பல்வயினுகர இன்சோறு (535) பிறவும் (534) தருநரிடத்தெழுந்த வோசையும் (535) கோடுபோழ்கடைநர் (511) முதலாகக் கண்ணுள்வினைஞரீறாகவுள்ளாரும் பிறருங்கூடிக் (518) கம்மியருங்குழீஇ (521) நிற்றர (522) எழுந்தவோசையும் பட்டினத்து (537) ஒல்லெனிமிழிசை மானக்கல்லென (538) என முடிக்க. இங்ஙனமுடித்தபின், நியமத்து (365) அல்லங்காடியில் அழிதரு கம்பலை (544) தூரியங்கறங்குகையினாலும் (460) கம்பலைகடுப்பக் (526) கல்லென்கையினாலும் (538) ஒல்லெனிமிழிசைமானக்கல்லென்கையினாலும் (538) பல் வேறுபுள்ளின் இசையெழுந்தற்றே (543) எனச்சேர வினைமுடிக்க. கல்லெனவென்பதனை இரண்டிடத்திற்குங்கூட்டுக. 3இவ்வோசைகளின் வேறுபாடுகளை நோக்கிப் பல்வேறுபுள்ளோசைகளைஉவமங்கூறினார்.
1 "ஞாயிறு பட்ட வகல்வாய் வானத், தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை, யிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த, பிள்ளை யுள்வாய்ச் செரீஇய, விரைகொண் டமையின் விரையுமாற் செலவே" (குறுந். 92) 2 அழியென்பது மிகுதியைக் குறித்தல், "அழியும்-பெருகும்" (சீவக. 1193, ந.) "அழிபசி-மிக்கபசி" (குறள், 226, பரிமேல்.) என்பவற்றாலும் உணரப்படும். 3 "பாய தொன்மரப் பறவைபோற் பயன்கொள்வான் பதினெண், டேய மாந்தருங் கிளந்தசொற் றிரட்சி" (திருவிளை. திருநகரப். 67)
|