கல்லென் 1மாலை நோயொடு புகுந்து நீங்க-கல்லென்னும் ஓசையையுடைய மாலை நயந்தோர்க்கு (549) நோயைச்செய்தலோடே புகுந்து போகையினாலே முந்தையாமஞ்சென்றபின்றை (620) என்க. நெடுநக (556) ரெல்லையெல்லாம் (557) மகளிர் (555) விளக்கங் கொளீஇக் (556) காதலின்றுணைபுணர்தற்குப் (550) புனையூஉத் துணைப்பக் (551) குடைய (552) அரைப்ப மறுக (553) மடுப்ப (544) இரவு வரும்படி (549) ஞாயிறு (546) குன்றஞ்சேருகையினாலே (547) மாலை (558) நயந்தோர்க்கு (549) நோயொடு புகுந்து (557) பின்னர் நீங்க (558) முந்தையாமஞ்சென்றபின்றை (620) எனக்கூட்டுக. 558. நாணு கொள-புணர்ச்சிநீங்கிற்றாகத் தமக்கு உயிரினுஞ் சிறந்த நாணை தம்மிடத்தே தடுத்துக்கொள்ள, 559-61. [ஏழ்புணர் சிறப்பி னின்றொடைச் சீறியாழ்,2தாழ்பயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து, வீழ்துணை தழீஇ.] ஏழ் புணர் சிறப்பின் இன் தொடை சிறு யாழ் பண்ணு பெயர்த்து-இசையேழும்தன்னிடத்தேகூடின தலைமையினையுடைய இனிய நரம்பினையுடைய சிறிய யாழைப் பண்களை மாறிவாசித்து, வீழ் துணை தழீஇ-தம்மைவிரும்பின கணவரைப் புணர்ந்து நாணுக்கொள (558) 3பாட்டுக் காமத்தைவிளைவித்தலின், யாழைவாசித்து வீழ்துணை தழீஇ யென்றார். 561-2. [வியல்விசும்பு கமழ நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்டு :] நீர் திரண்டன்ன கோதை வியல் விசும்பு கமழ, பிறக்குஇட்டு-
1 மாலை நோயொடு புகுதல் : "மாலை ................. நோயே மாகுதல்", (குறுந். 64:2-4) ; "மாலைநோய் செய்தல்", "மாலை மலமிருந்தநோய்" (குறள், 1226-7) 2 தொல். புள்ளிமயங். சூ. 11, ந. மேற். 3 "இசையுங் கூத்துங் காமத்திற்கு உத்தீபனமாகலின்" (சீவக. 2597, ந.); "கிளைநரம் பிசையுங் கூத்துங் கேழ்த்தெழுந் தீன்ற காம, விளைபயன்" (சீவக. 2598) ; "நஞ்சுகொப் புளிக்கும் பேழ்வாய் நாகணை துறந்த நம்பி, கஞ்சநாண் மலர்வாய் வைத்த கழையிசை யமிழ்த மாரி, அஞ்செவி தவழ்த லோடு மாய்ச்சியர் நிறத்து மாரன், செஞ்சிலை பழுத்துக் கான்ற செஞ்சரந் தவழ்ந்த மாதோ" (பாகவதம். 10. 12:6) ; "அவ்விய மதர்வேற் கண்ணா ரந்தளிர் விரன டாத்துந், திவ்விய நரம் புஞ் செவ்வாய்த் தித்திக்கு மெழாலுந் தம்மிற், கவ்விய நீர் வாகிக் காளையர் செவிக்கா லோடி, வெவ்விய காமப் பைங்கூழ் விளைதர வளர்க்கு மன்றே" (திருவிளை. திருநகரப். 52)
|