கவவு கரந்து (570) வளம் தப வாங்கி (572)-அங்ஙனம்1அன்புடையார்போலே முயங்கினமுயக்கத்தை அவர்பொருள் தருமளவும் மறைத்து அவருடைய செல்வமெல்லாம் கெடும்படியாக வாங்கிக்கொண்டு, 573-4. நுண் தாது உண்டு வறு பூ துறக்கும் மெல் சிறை வண்டு இனம் மான-பூ அலருங்காலமறிந்து அதன் நுண்ணிய தாதையுண்டு தாதற்ற வறுவியபூவைப் பின்னர் நினையாமல் துறந்துபோம் மெல்லிய சிறகையுடைய வண்டின்றிரளையொப்ப, இது தொழிலுவமம். 574-5. புணர்ந்தோர் நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து-தம்மை நுகர்ந்தோருடைய நெஞ்சு கலக்கமுறும்படி அவரிடத்து இனிய கூட்டத்தை நேராகக் கைவிட்டு, 576. பழம் தேர் வாழ்க்கை பறவை போல-பழுமரமுள்ள இடந்தேடிச் சென்று, அவற்றின் பழத்தையே ஆராய்ந்து வாங்கி நுகர்தலைத் தமக்குத் தொழிலாகவுடைய புள்ளினம்போல, தம்முயிரைப் பாதுகாக்கின்ற வாழ்க்கைத்தொழிலை வாழ்க்கையென்றார். 577-8. [கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய, மணம்புணர்ந்தோங்கிய வணங்குடை நல்லில் :] கொழு குடி செல்வரும் பிறரும் மேஎய அணங்கு உடை நல் இல்-வளவிய குடியிற்பிறந்த செல்வரும் அவர்களாற்றோன்றிய பிறசெல்வரும் மேவப்பட்ட இல்லுறை தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களில், 2குடிச்செல்வரென்றார், நான்குவருணத்தை ; பிறரென்றார், அவர்களாற் றோன்றிய ஏனைச்சாதிகளை. 578-9. மணம் புணர்ந்து ஓங்கிய ஆய் பொன் அவிர் தொடி பசு இழை மகளிர்-வரைந்து கொள்ளப்பட்டு உயர்ச்சிபெற்ற ஓடவைத்த பொன்னாற்செய்த விளங்குகின்ற தொடியினையும் பசியபூணினையுமுடைய மகளிர், 580. ஒள் சுடர் விளக்கத்து-ஒள்ளிய விளக்கினுடைய ஒளியிலே, பலர் உடன் துவன்றி-பலருஞ் சேரநெருங்கி, 581-2. நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் வானவமகளிர் மான-நீலநிறத்தையுடைய ஆகாயத்தே நெஞ்சமர்ந்துவிளையாடும் தெய்வ மகளிர் வருத்துமாறுபோல,
1. "மெய்படு மன்பி னார்போல விரும்பினார்க் கருத்துந் தங்கள், பொய்படு மின்பம்" (திருவிளை. திருநகரப். 47) 2. பெரிய. திருக்குறிப்பு. 99-103 ; திருவிளை. திருநகரங்கண்ட. 45, பார்க்க.
|