406

மணங்கமழ் மனைதொறும் (589) பறவைபோலச் (576) சென்று பொய்தலயர (589) எனக்கூட்டுக.

செல்வரும் பிறரும் மேவப்பட்ட (577) அணங்குடைநல்ல இல்லிலே மணம்புணர்ந்தோங்கிய (578) பாசிழைமகளிர் (579) ஒண்சுடர் விளக்கத்தே (580) சீறியாழைப் (559) பண்ணுப்பெயர்த்து (560) வீழ்துணைதழீஇ (561) நாணுக்கொள (558) எனக்கூட்டுக.

590-91. கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓணம் நல் நாள்-திரட்சியைக்கொண்டஅவுணரை வென்ற பொன்னாற்செய்த மாலையினையுடைய மாமையை யுடையோன் பிறந்த ஓணமாகிய நன்னாளில் ஊரிலுள்ளாரெடுத்த விழவிடத்தே,

592-5. [கோணந் தின்ற வடுவாழ் முகத்த, சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை, மறங்கொள் சேரி மாறுபொரு செருவின், மாறா துற்ற வடுப்படு நெற்றி :]

மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் (594) மாறாது உற்றவடு படு நெற்றி (595)-இற்றைநாட் போர்செய்துமென்றுகருதி மறத்தைக் கொண்டிருக்கின்ற தெருவுகளில் தம்மிற்றாம் மாற்றாய்ப்பொருகின்ற போரின்கண்ணே நின்ற அடிமாறாமையாற்பட்ட1வடுவழுவந்தின நெற்றியினையும்,

596. சுரும்பு ஆர் கண்ணி பெரு புகல்மறவர்-சுரும்புகள் நிறைந்த 2போர்ப்பூவினையும் பெரிய விருப்பத்தினையுமுடைய மறவர்,

அத்திருநாளிற்பொரும் 3சேரிப்போர் கூறினார், அவ்வூர்க்கு இயல்பென்று.

597. [கடுங்களி றோட்டலின் :] 4கோணம் தின்ற வடு ஆழ் முகத்த (592) சாணம் தின்ற சமம் தாங்கு தட கை (593) கடு களிறு ஓட்டலின்-தோட்டி வெட்டின வடு அழுந்தின முகத்தையுடையவாய்க் கொலைபழக்கும் போர்யானை பலகாலுமெடுத்தலால் தழும்பிருந்த


1. "துள்ளிவரு செங்கையொடு முன்கைபிடர் நெற்றியோடு சூட மென வெண்ணுபடையால் ............ மல்லமர் தொடங்கி யுறவே" (வி. பா. அருச்சுனன் தவநிலை. 110) என்பதனால் நெற்றி வடுப்படுதலின் காரணம் உணரப்படும்.

2.போர்ப்பூ-தும்பை ; "தும்பை-போர்ப்பூ"(பு. வெ. 241, உரை)

3. சேரிப்போர் : "கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரி தனிற், கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தா, னார்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்" (தே. திருஞா.)

4. கோணம்-தோட்டி ; மணி. 18:163.